ராகவா லாரன்ஸ் அவர்கள் மாற்றம் என்ற அறக்கட்டளையை துவக்கினார். இதன் மூலமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளுக்கு மகேந்திரா டிராக்டர் ரூபாய் 12 லட்சம் மதிப்புள்ள இந்த டிராக்டர் கிராம மக்களுக்கு இலவசமாக பயன்பாட்டிற்கு அளிக்கப்பட்டு வருகின்றனர்.
நடிகர் ராகவா லாரன்ஸ், பல வருடங்களாக பல்வேறு உதவிகள் செய்து வருகிறார். இவர் இப்போது ‘மாற்றம்’ என்ற பெயரில் அறக்கட்டளை கடந்த மே 1 ஆம் தேதி தொடங்கியுள்ளார்.

அதில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து ராகவா லாரன்சுடன் சேவை பணியாற்ற உள்ளதாக அவரது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அது தொடர்ந்து செஃப் வினோத், அறந்தாங்கி நிஷாவும், KPY பாலா இணைந்து செயல்பட உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக மே 1 ஆம் தேதி விழுப்புரம் வட்டம் திண்டிவனத்தில் கொடுக்கப்பட்டார்.

இரண்டாவது கட்டமாக இன்று விழுப்புரம் மாவட்டம் மோட்ச குளம் கிராம மக்கள் வானவியுடன் வரவேற்று பின்பு அங்குள்ள அம்மன் கோவிலில் சென்று சாமி கும்பிட்டு விட்டு, அங்கு கூடியிருந்த கிராம மக்களுக்கு இருகரம் கைகூப்பி மரியாதை செலுத்தினார்.

ராகவா லாரன்ஸ் தொடங்கிய ‘மாற்றம்’ அறக்கட்டளை மூலம் டிராக்டர் உதவி
பிறகு பகுதி மக்களுக்கு கொடுக்க இருந்த டிராக்டர் மேல் ஏறி அமர்ந்து சாவி போட்டு வண்டி ஸ்டார்ட் பண்ணி விட்டு மாற்றுத்திறனாளி பிரபு என்பவரிடம் சாவியை கொடுத்து ஒப்படைத்தார்.

இங்கு உள்ள விவசாயம் செய்கின்ற மக்கள் இந்த டிராக்டரை இலவசமாக பிரபுவிடம் வந்து கேட்டு வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார்.