இன்றைய ராசிபலன் பிப்ரவரி 27, 2024, சோபகிருது வருடம் மாசி 15, செவ்வாய்க்கிழமை, சந்திரன் சிம்மம் ராசியில் சஞ்சரிக்கிறார். கும்ப ராசியில் உள்ள விசாகம், அனுஷம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது.
மேஷம்:

இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். உங்களின் தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். பிரச்சனைகள் தீர்க்க சகோதரர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். உங்கள் தனிப்பட்ட குடும்ப விஷயங்களில் நிதானம் தேவை. வீண் பேச்சுக்களால் பிரச்சினைகள் ஏற்படலாம். எந்த விதமான வாக்குவாதத்திலும் ஈடுபடக்கூடாது. முதலீடு மற்றும் எந்தவொரு சட்ட விஷயத்திலும் அனுபவம் வாய்ந்த ஒருவரின் ஆலோசனையை எடுத்துக் கொள்வது நல்லது.
ரிஷபம்:

இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் சில புதிய தொழில்நுட்பங்கள், திட்டங்களை பின்பற்றலாம். இது உங்களின் தொழிலை மேலும் விரிவுபடுத்தும். புதிய வேலைகளைத் தொடங்கும் வாய்ப்பும், அதில் நல்ல வெற்றியும் கிடைக்கும். பணம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் நிறைந்ததாக இருக்கும். கடன் வாங்குதல், முதலீடு செய்தல் போன்ற விஷயங்களில் முன்னேற்றம் பெறக்கூடிய நாளாக இருக்கும். சில திட்டங்களில் முதலீடு செய்வது குறித்து உங்கள் தந்தையின் ஆலோசனை கிடைக்கும்.
மிதுனம்:

இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். பணியிடத்தில் ஒன்றன் பின் ஒன்றாக நல்ல செய்திகளைக் கேட்டுக்கொண்டே இருப்பீர்கள். நீங்கள் உங்கள் வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயற்சிக்க வேண்டும். உங்கள் மதிப்புமிக்க பொருட்களை பாதுகாக்க வேண்டிய நாள். புதிதாக ஏதாவது செய்ய நினைப்பீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
கடகம்:

இன்று நீங்கள் உங்கள் பணத்தை மிகவும் சிந்தனையுடன் செலவிட வேண்டிய நாள். அந்நியர்களுடன் எந்த பரிவர்த்தனையும் செய்வதை தவிர்க்கவும். அப்படி செய்தாலும் கூடுதல் கவனம் தேவை. உங்கள் வருமானத்தை விட அதிகமான பணத்தை நீங்கள் செலவழிப்பீர்கள். சொந்த வேலையை விட மற்றவர்களின் வேலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வெளியூர் செல்ல நினைப்பவர்களின் விருப்பம் நிறைவேறும்.
சிம்மம்:

இன்று நீங்கள் எந்த வேலையிலும் அலட்சியமாக இருப்பதை தவிர்க்க வேண்டும். நண்பர்களின் உதவியுடன் சில தொழில் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்யலாம். குடும்பத்தில் யாரேனும் ஒருவரின் திருமணத்தில் ஏதேனும் தடைகள் நீங்கும். பிஸியான வேலைக்கு நடுவே வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடவும் நேரத்தை ஒதுக்குங்கள். வியாபாரிகளுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
கன்னி:

இன்றைய நாள் உங்களின் பதவி உயர்வும், நற்பெயர் கிடைக்கும் நாளாக இருக்கும். கலைத்துறை தொடர்புடையவர்கள் பெயர் பெற வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் புதிய முயற்சிகள் வெற்றியடையும். சில பிரச்சனைகளும், போராட்டங்களும் நீங்கும். சமூகத்தில் நற்பெயர் பெறுவீர்கள். எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்கும் முன், உங்கள் பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்குங்கள்.
துலாம்:

இன்று மாணவர்களின் உயர்கல்விக்கான நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். இக்கட்டான நேரங்களில் பெரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். திட்டங்களை நிறைவேற்றி லாபம் பெறலாம். உங்கள் தாய்வழியில் இருந்து நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பெரிய லாபம் அடைவீர்கள். உங்கள் பிள்ளைக்கு தொழில் சம்பந்தமாக பிரச்சனைகள் தீரும்.
விருச்சிகம்:

இன்று உங்களின் முடிவெடுக்கும் திறன் சிறப்பாக இருக்கும். அதற்கான பலனைப் பெறுவீர்கள். நீங்கள் உங்கள் உணவுப் பழக்கத்தை மேம்படுத்த வேண்டிய நாள். இல்லையெனில் வயிறு தொடர்பான பிரச்சினைகள் சந்திக்க நேரிடும். உங்கள் வார்த்தைகளால் மக்களை மகிழ்விப்பதில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவால் உங்களின் பல பிரச்சனைகள் தீரும்.
தனுசு:

இன்று உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு அதிகரிக்கும். உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நண்பர்களுடன் சில மறக்கமுடியாத தருணங்களை செலவிடுவீர்கள். எந்த ஒரு வேலையிலும் பொறுமையையும் தைரியத்தையும் கடைப்பிடியுங்கள். குடும்பத்தில் நடக்கும் சச்சரவுகளால் மனம் பாதிக்கப்படும். பணியிடத்தில் சில முக்கியமான பொறுப்புகள் உங்களிடம் ஒப்படைக்கப்படலாம்.
மகரம்:

முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறு கள் விலகும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். தட்சிணாமூர்த்தியை தியானிப்பதன் மூலம் நற்பலன்கள் அதிகரிக்கும்.
கும்பம்:

இன்று எதிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத்துணை யின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அலைச்சல் உண்டாகும். தந்தைவழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். சரபேஸ்வரரை வழிபட பிரச்னைகள் நீங்கி மன அமைதி உண்டாகும்.
மீனம்:

புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். தாய்வழி உறவினர்கள் தொடர்பு கொண்டு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துகொள்வர். எதிரிகள் வகையில் எச்சரிக்கை யாக இருக்கவும். சிலருக்கு வீண் அபவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் பிரச்னை கள் எதுவும் இல்லை. அம்பிகை வழிபாடு அனுகூலமான பலன்களைத் தரும்.