மேஷம்:

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்றைய நாள் சாதாரணமாக இருக்கும். கடினமாக உழைத்தாலும் கூட பலன்கள் குறைவாகவே இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உங்களது நல்லுறவு உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும். தேவையற்ற மோதல்களை தவிர்க்கவும்.
பரிகாரம்:- சிவலிங்கத்திற்கு தண்ணீரால் அபிஷேகம் செய்யவும்
ரிஷபம்:

எந்தவொரு ஒப்பந்தத்தை இன்று இறுதி செய்து முடிக்கும் போது, ஆவணங்களை கவனமாக சரிபார்க்கவும். உங்களின் இன்றைய பெரும்பாலான நேரம் முக்கிய வேலைகளுக்காக செலவிடப்படும். நிலுவையில் இருக்கும் வேலைகளை முடிப்பீர்கள். பணியிடத்தில் கொடுக்கப்படும் அதிக வேலைப்பளுவால் ஊழியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.
பரிகாரம்; மஞ்ச நிறப் பொருளை பிறருக்கு தானமாக கொடுங்கள்
மிதுனம்:

தொழிலதிபர்கள் இன்று தங்களின் வணிக நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது அவசியம். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் உங்ககளுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட கூடும், இது உங்களின் வேலை திறனை பாதிக்கும். புதிய நபர்களுடனான சந்திப்பின் மூலம் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும்.
பரிகாரம்; சனி பகவானை வழிபடுங்கள்
கடகம்:

வணிகம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடும் சொந்த தொழில் செய்வோர் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முக்கியமான நபர்களுடனான சந்திப்பு உங்களுக்கு நேர்மறை விஷயங்களை பெற்று தரும். வேலையில் இருப்பவர்கள் அலுவலகத்தில் உற்சாகமாக இன்று பணிகளை செய்து முடிப்பார்கள்.
பரிகாரம்: பஜ்ரங்பலியை வழிபடுங்கள்
சிம்மம்:

ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் தொடர்பான வேலைகளில் இருப்போருக்கு இன்று வெற்றி கிடைக்கும். சிறிய விஷயமாக இருந்தாலும் கடின உழைப்பு உங்களுக்கு வெற்றியைத் தரும். அதிர்ஷ்டம் இன்று உங்கள் பக்கம் உள்ளது. அதை சரியாக பயன்படுத்துங்கள். முதலீடு சம்பந்தமான விஷயங்களில் கவனமாக இருக்கவும்.
பரிகாரம்: பசியோடு இருப்பவர்களுக்கு உணவளியுங்கள்
கன்னி:

இன்று நாள் உங்களுக்கு அவ்வளவாக சாதகமாக இல்லை. எனவே எந்த ஒரு புதிய வேலையையும் இன்று துவக்காமல் ஏற்கனவே செய்து வரும் வேலைகளை மட்டும் கவனித்துக் கொள்வது நல்லது. வாழ்க்கை துணையிடம் இன்று நீங்கள் வெளிப்படையாக இருங்கள். இல்லையெனில் தகராறுகள் ஏற்படலாம்.
பரிகாரம்: கிருஷ்ண பெருமானை வழிபடுங்கள்
துலாம்:

பணியிடத்தில் உங்களுக்கென்று ஒதுக்கப்படும் வேலைகளில் அதிக கவனம் தேவை. உங்களது அதிகபட்ச திறனை வெளிப்படுத்தி நீங்கள் அனுபவசாலி என்பதை நிரூபிப்பீர்கள். சொந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பொருளின் தரத்தை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். புதிய முதலீட்டை இன்று தவிர்க்கவும்.
பரிகாரம்: நீல நிற பொருட்களை பிறருக்கு தானம் செய்யுங்கள்
விருச்சிகம்:

இன்று நீங்கள் காட்டும் அலட்சியத்தால் முக்கிய விஷயங்களில் சிக்கல் எழலாம். பண முதலீடு தொடர்பான வேலைகளில், யாருடைய வார்த்தைகளிலும் விழுந்து விடாமல் தீர விசாரித்து முடிவெடுங்கள். பணியிடத்தில் உங்களின் இலக்கை அடைய நிறைய கடின உழைப்பு தேவை.
பரிகாரம்: நீல நிற பொருட்களை பிறருக்கு தானம் செய்யுங்கள்
தனுசு:

இன்று எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன், அனுபவம் வாய்ந்த நபருடன் கலந்தாலோசிக்கவும். ஏனென்றால் இன்று நீங்கள் தனித்து எடுக்கும் முடிவுகள் தவறாக இருக்கலாம். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு திடீரென வேலை தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும்.
பரிகாரம்: காளி தேவியை வழிபடுங்கள்
மகரம்:

சுயமாக தொழில் செய்வோருக்கு இன்று வணிக சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். அவற்றை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். பணியில் உள்ள ஊழியர்களுக்கு அவர்களுடன் பணியாற்றும் சக ஊழியர்களின் பொறாமை மற்றும் போட்டி உணர்வை சந்திக்க நேரிடும்.
பரிகாரம்: விநாயகரை வழிபடவும்
கும்பம்:

இன்று வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கும்ப ராசிக்காரர்கள் தங்களது தொழிலை விரிவுபடுத்துவதற்கோ அல்லது புதிய வேலையை தொடங்குவதற்கோ மிகவும் சாதகமான நாள். ஓரிடத்தில் வேலை செய்பவர்கள் பதவி உயர்வு அல்லது போனஸை பெறுவார். பணத்தை புதிய விஷயங்களில் முதலீடு செய்வதில் எச்சரிக்கை இருக்க வேண்டும்.
பரிகாரம்: கூண்டுகளில் அடைக்கப்பட்ட பறவைகளை விடுவிக்கவும்
மீனம்:

வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவாக இன்றைய கிரக நிலை இல்லை. எந்தவொரு முக்கியமான முடிவையும் எடுப்பதற்கு முன் அனுபவமிக்க மூத்த நபர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை பெற வேண்டும். அரசு வேலையில் இருப்பவர்கள் இன்று தங்கள் பணியில் அலட்சியமாக இருக்க கூடாது.
பரிகாரம்: பெற்றோரின் ஆசிர்வாதம் பெற்று வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள்