- தமிழகத்தில் மதுவில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டி கும்பகோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சர்வ மங்கள மகா யாகம் இன்று நடைபெற்றது.
தமிழகத்தில் மது கடைகளினால் ஏராளமானோர் பாதிக்கப்படுவதாகவும் இதனை தடுத்திடும் வகையில்இன்று கும்பகோணம் புகைவண்டி சாலையில் பாட்டாளி மக்கள் கட்சி சர்வ மங்கள மகர யாகத்தினை நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகைகள் பயன்படுத்தப்பட்டது.
இந்த யாகத்தில் 300 க்கும் மேற்பட்டபெண்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக மகாமக குளத்தில் இருந்து ஏராளமான பெண்கள் யாகத்திற்கு தேவையான மங்கள பொருட்களுடன் ஊர்வலமாக வந்தனர்.
கும்பகோணத்தில் நடைபெறும் இந்த சர்வ மங்கள யாகம் நிகழ்ச்சியில் பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸின் மகள் காந்தி பரசுராமன் மற்றும் இக்கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளையும் படிப்படியாக மூட வேண்டும், மது அருந்துவதை மக்கள் முற்றிலுமாக கைவிட வேண்டும் என்பது இந்த யாகத்தின் நோக்கம்.