வாரிசு அரசியலையும் ஊழல் அரசியலையும் தாங்கிக் கொள்ள வேண்டும் என்றால் இதயத்தை பலப்படுத்திக் கொள்ள வேண்டும்- வானதி சீனிவாசன்.

0
17
  • வாரிசு அரசியலையும் ஊழல் அரசியலையும் தாங்கிக் கொள்ள வேண்டும் என்றால் இதயத்தை பலப்படுத்திக் கொள்ள வேண்டும்- வானதி சீனிவாசன்…

கோவை பந்தய சாலை பகுதியில் உலக இதய தினத்தை முன்னிட்டு தனியார் மருத்துவமனை, ரோட்டரி கிளப் சார்பில் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு துவக்கி வைத்து நடைபயிற்சி மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்றைக்கு மாறிக்கொண்டிருக்கக் கூடிய வாழ்க்கை சூழலில் இதய நோய் காரணமாக மக்கள் அதிகமானோர் உயிரிழக்கிறார்கள், இதயத்தை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைப்பதற்காக பல்வேறு பழக்க வழக்கங்களை மருத்துவர்கள் பரிந்துரைப்பதாக தெரிவித்தார். சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு இது குறித்து எடுத்துரைக்க வேண்டி இருப்பதாகவும் கூறினார்.

அதேபோல் தமிழ்நாட்டு அரசியல் குறித்து 11 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பதாகவும், தமிழ்நாட்டு அரசியலில் வாரிசு அரசியலையும் ஊழல் அரசியலையும் தாங்க வேண்டும் என்றால் இதயத்தை பலமாக வைத்திருக்க வேண்டும் எனவும் அதற்காக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்

தொடர்ந்து இன்றைய அரசியல் நிகழ்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு இதயத்தை பலப்படுத்தி விட்டு வருகிறேன் என கூறி சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here