திருவள்ளூர் அடுத்த காக்களூரில் அரசு ஆவின் பால் பண்ணை உள்ளது. இந்த பால் பண்ணையில் இருந்து நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 92ஆயிரம் லிட்டர் அளவுக்கு பால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று (ஆக.20) இவர் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென அவரது சுடிதாரின் துப்பட்டா, இயந்திரம் அருகில் உள்ள மோட்டரின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி உள்ளது. இதனால் உமா ராணி தலையும் அந்த மோட்டரில் சிக்கிக் கொண்டதில் சம்பவ இடத்திலேயே அவர் தலைமாட்டி துண்டாகி இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால், உமா ராணியின் தலை மோட்டாரில் சிக்கி ஏற்பட்ட விபத்தில், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து அவர் தலை துண்டாகி பலியாகியுள்ளார்.
பின்னர், இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி கந்தன் தலைமையிலான போலீசார், உமா ராணி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து ஆவின் பால் பண்ணையில் பால் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த விசாரணையில், இவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், கணவர் கார்த்தி இருங்காட்டுக் கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
மேலும், இறந்த பெண் காக்களூர் பைபாஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தங்கி ஆவின் பால் பண்ணைக்கு கடந்த 6 மாதமாக வேலைக்கு வந்ததும் தெரியவந்தது. தற்போது இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணியின் போது, பெண் தலைமுடி இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.