Tirupattur : கார் ஓட்டுநரின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு – மர்ம கும்பல் குறித்து போலீசார் வலைவீச்சு..!

1 Min Read

திருப்பத்தூர் மாவட்டம், அடுத்த நாட்றம்பள்ளி அருகே சமையக்காரனூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் சரவணன் (42). இவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

- Advertisement -
Ad imageAd image

இந்த நிலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் மண்ணெண்ணெய் திரிகொண்ட குண்டை சரவணன் வீட்டின் போர்டிகோ, கழிவறை, படி உள்ளிட்ட பகுதிகளில் வீசி சென்றுள்ளனர்.

கார் ஓட்டுநரின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு

இதுகுறித்து சரவணன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதன் காரணமாக சரவணன் கொடுத்த புகாரின் பேரில் வாணியம்பாடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், மற்றும் நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் தீவிர சோதனை

மேலும் மண்ணெண்ணெய் குண்டு வீசி நபர்கள் யார், எதற்காக வீசப்பட்டது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாட்றம்பள்ளி பகுதியில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review