திருடிய வீட்டின் வாசலிலே நகை, பணம் போட்டுச்சென்ற திருடன்..!

2 Min Read

ஊரோடு விளக்குகளை அணைத்து திருட்டு நகை மீட்க மக்கள் முயற்சித்த போது திருடிய வீட்டில் வாசலில் 14 பவுன் நகை, ரூபாய் 3 லச்சத்தை திருடனே போட்டிச் சென்ற ருசிகர நிகழ்வு மீண்டும் நடந்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே கள்ளிக்குடி கிராமத்தில் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் வயது 32. கடந்த 29ஆம் தேதி இவர் தன் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விடுவதற்காக அழைத்துச் சென்றார். அப்போது அவருடைய மனைவியும் கடைக்கு சென்று இருந்தார். வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த ஆசாமி, அந்த வீட்டுக்குள் புகுந்து பீரோவை திறந்து அதில் இருந்த 14 பவுன் நகையும் ரூபாய் 4 லட்சத்து 45 ஆயிரத்தையும் திருடிவிட்டு தப்பி சென்று விட்டான். கண்ணன் வீடு திரும்பிய போது பீரோவில் இருந்த நகைகள், பணம் திருட்டுப் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

சமயநல்லூர் காவல் நிலையம்

இந்த நிலையில் கள்ளிக்குடி கிராம மக்கள் நேற்று முன்தினம் கூடி திருட்டுப் போன நகையை மீட்க முடிவு செய்தனர். அதன்படி கள்ளிக்குடி கிராமத்தில் உள்ள 120 வீடுகளுக்கும், ஒரு பாலித்தீன் பை கொடுக்கப்பட்டு யாராவது நகை, பணத்தை திருடி இருந்தால் மந்தையில் உள்ள பிள்ளையார் கோவில் முன்பு வைக்கப்பட்டு உள்ள பிளாஸ்டிக் ட்ரம்மில் கொண்டு வந்து போட்டு செல்லும் படியும் இல்லை என்றால் கோவிலில் காசு வெட்டி போட்டு தாங்கள் திருடவில்லை என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறி சென்றார்கள். இதற்காக நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு மின்விளக்குகள் எரியாமல் இருக்க ஊர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5:30 மணிக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.

மதுரை கோர்ட்டு

திருடன் தெய்வத்துக்கு பயந்து தான் திருடிய 14 பவுன் நகைகள் ரொக்கப்பணம் ரூபாய் 3 லட்சத்து 15 ஆயிரத்து மட்டும் பாலித்தீன் பையில் போட்டு கொண்டு வந்து கண்ணன் வீட்டு வாசலில் தனது நகை, பணம் கிடைப்பதை பார்த்து கண்ணன் மகிழ்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்தும் போலீசார் விரைந்து சென்று நகை, பணத்தை தங்கள் வசப்பட்டனர். இது குறித்து போலீசார் கூறும் போது திருட்டு வழக்கு பதிவு செய்திருப்பதால் நகை, பணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் கண்ணனிடம் வழங்கப்படும். திருட்டுப் போன மீதி பணம் ரூபாய் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

சமீபத்தில் திருமங்கலம் அருகே பெரியபொக்கம் பட்டி கிராமத்தில் ஊர் மக்கள் எடுத்த முயற்சியால் 26 பவுன் நகை திருடனிடம் இருந்து மீட்கப்பட்டது என குறிப்பிடத்தக்கது. அதே போன்ற ஓர் ருசிகர நிகழ்வு மீண்டும் நடந்துள்ளது. இதுவும் மதுரை மாவட்டத்தில் பேசு பொருளால் ஆகி வருகிறது.

Share This Article
Leave a review