தமிழ்நாடு போல மற்ற மாநிலங்களில் கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைப்பு இல்லை – காதர் மொய்தீன்..!

1 Min Read

தமிழ்நாடு போல மற்ற மாநிலங்களில் கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைப்பு இல்லை என காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் கூறுகையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர், மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

திமுக

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போல ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்தால் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தமிழ்நாடு போல மற்ற மாநிலங்களில் கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைப்பு இல்லை. வருங்காலங்களில் இதை உணர்ந்து இந்தியா கூட்டணி செயல்பட வேண்டும்.

கேரளாவில் மக்களவை, மாநிலங்களவையில் தலா 2 எம்பிக்களும், தமிழகத்தில் ஒரு எம்.பி. என நாடாளுமன்றத்தில் எங்கள் கட்சியில் 5 எம்பிக்கள் உள்ளனர். முஸ்லீம்கள் பெரும்பான்மை உள்ள மாநிலங்களில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேவையில்லை என்று காயதே மில்லத் சொன்னதை இன்னமும் கடைபிடித்து வருகிறோம்.

இந்தியா கூட்டணி

இந்தியாவில் 4,698 சாதிகள் உள்ளதாக கணக்கெடுப்பு சொல்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பும் மத்திய அரசு நடத்தும் என நம்புகிறோம். கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பை விரைந்து நடத்த வேண்டும்.

அப்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து கல்வி, வருவாய் உள்ளிட்ட விவரங்களையும் சேர்த்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றார். மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான் ரப்பானி, மாநில நிர்வாகி முகமது ரபி, மாவட்ட செயலாளர் அமீர் அப்பாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a review