மோடியுடன் ஒப்பிடக்கூடிய வகையில் தலைவர்கள் இந்தியாவில் இல்லை – நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்..!

2 Min Read
புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்

திராவிட இயக்கம் வளர்த்திட்ட மூத்த திமுக முன்னோடியும், மறைந்த முன்னாள் அமைச்சருமான ப. உ.சண்முகம் இல்ல திருமண விழாவில் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் இன்று கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

- Advertisement -
Ad imageAd image

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் சில தினங்களாக சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக உள்ளது என்றும், ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசியும் அளவிற்கு துணிச்சல் வந்துள்ளதாகவும், இதனை அடக்க வேண்டும், ஒடுக்க வேண்டும், என்று கேட்டுக் கொண்டவர். வரவுள்ள நாடாளுமன்ற தேர்தல் என்பது பாரத பிரதமர் யார் என்று தேர்தல் தான் என்றும், இந்தியாவை யார் ஆளப்போகிறார்கள் என்பதை மையப்படுத்தியே நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளது என்றும், தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளதாகவும் கூறினார்.

புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்

மோடியுடன் ஒப்பிடக்கூடிய வகையில் தலைவர்கள் இந்தியாவில் இல்லை என்றும், 65 ஆண்டு கால வரலாற்றில் இந்தியாவை நான்கு மடங்கு முன்னேற்றத்தில் உயர்த்தி உள்ளார் என்றும், இந்திய நாடு வல்லரசாகி கொண்டு இருக்கிறது என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் வரும் பொழுது இந்திய நாடு மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும் என்றும் தெரிவித்த அவர், உலகத் தலைவர்களின் ஒருவராக பிரதமர் மோடி திகழ்கிறார் என்றும் கூறினார்.

உலகத்தை ஒட்டுமொத்தமாக ஒன்றாக தனது கைக்குள் கொண்டு வந்தவர் பிரதமர் மோடி என்றும், 140 கோடி பேர் ஒரே நேரத்தில் தேர்தலில் வாக்களிக்கும் சூழல் வந்தால் 100 கோடி பேர் பிரதமர் மோடிக்கு தான் வாக்களிப்பார்கள் என்றும், ஆருடம் கூறிய அவர் புதிய நீதி கட்சி என்றும் பாஜகவுடன் உறுதுணையாக இருக்கும் என்றும் கூறினார்.5 மாநில தேர்தலில் 4 மாநில தேர்தல் வெற்றியை பாஜக எளிதாக வென்று விடுவார்கள்.

புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்

அதனை ஆருடம் கூறிய அவர் I N D I A கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் அறிவித்தால் அன்று மாலையே அந்த கூட்டம் கலைந்து விடும் என்றும், ஏனென்றால் அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை என்றும் கூறிய அவர் ப்ரா பாரதப் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து யாரும் கருத்து கூற முடியாது என்றும், கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகை குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிலுவைத் தொகையை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Share This Article
Leave a review