வட மாநில தொழிலாளர்களிடம் கத்தியை காட்டி வழிப்பறி..!

2 Min Read

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வட மாநில தொழிலாளரிடம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம். அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வழிப்பறி, கொள்ளை, வீடு திருட்டு போன்ற குற்றங்கள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து விக்கிரவாண்டி அருகே வட மாநில தொழிலாளரிடம் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வாகனத்தில் வழிப்பறி செய்த சம்பவம் நடந்தது. தமிழகத்தின் பல பகுதிகளில் தீபாவளி பண்டிகை நேரத்தில் மது போதையில் பல சம்பவங்கள் நடைபெற்றன. காவல்துறையினர் எவ்வளவோ கட்டுப்பாடுகள் விதித்தும் சில சம்பவங்கள் நடைபெற்றுத்தான் வருகின்றது.

வட மாநில தொழிலாளர்களிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்த இளைஞர்

மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த நாராயர் நாயக் மகன் சோதன் நாயக் வயது (19), என்பவர் விக்கிரவாண்டி அடுத்த திண்டிவனம் சாலையில் உள்ள தொறையானூரில் தங்கி, விக்கிரவாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஜமுக்காமலம் போர்வைகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி மாலை அவரது நண்பர் ரோஷன் என்பவருடன் பேரணி கிராமத்தில் வியாபாரம் செய்து வந்த போது திடீரென அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து கத்தியை காட்டி, கொலை மிரட்டல் விடுத்து, அசிங்கமாக பேசி ஜமுக்காலம் மற்றும் வியாபாரம் செய்த பணம் ரூபாய் 700 சோதன் நாயக்கிடம் இருந்து பிடிங்கி சென்றனர்.

வட மாநில தொழிலாளர்களிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்த இளைஞர்

இதனையடுத்து சோதன் நாயக் கொடுத்த புகாரின் பேரில் பெரியதச்சூர் உதவி ஆய்வாளர் மருதப்பன், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து விசாரணையில் பேரணி புதுகாலணியை சேர்ந்த வெங்கடேசன் மகன் துளசி வயது (24) என்பவரையும், அய்யனார் மகன் விக்கி என்கிற விக்னேஷ் வயது (20), என்பதும் இவர்கள் இருவரும் வழிப்பறியில் ஈடுபட்டது போலிசாரிடம் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.தொடர்ந்து போலீசார் இந்த பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பண்டிகை காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.

 

Share This Article
Leave a review