அமைச்சர் உதயநிதி பங்கேற்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் விழா மேடையை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகின்ற 19ஆம் தேதி மாண்புமிகு அமைச்சர் உதயநிதி அவர்கள் வருகை தந்து நலத்திட்ட உதவிகள் மற்றும் கலந்தாய்வு கூட்டங்கள். கொடியேற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். அதுசமயம் கள்ளக்குறிச்சி அருகே உலகங் காத்தான் கிராமத்தில் 25 ஆயிரம் நபர்கள் அமரும் வகையில் பிரம்மாண்ட விழா மேடை அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்த விழா மேடையை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு நேரில் ஆய்வு செய்தார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம். எல். ஏ. கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம். எல். ஏ மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இந்த விழா மேடை, பகுதிகள் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் அமரும் இடங்கள் வசதி உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அதிகாரி சத்யநாராயணன், வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா. மாவட்ட எஸ்பி மோகன்ராஜ். மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.