கடந்த சில மாதங்களாக வன விலங்குகள் வனப்பகுதியில் இருந்து விளை நிலங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் வந்து சேதம் விளைவித்து வருகின்றன. அந்த வகையில் தென்காசியில், சங்கரன் கோவில் அருகே மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் நெற்பயிர்களை அழித்து நாசம் செய்ததால் விவசாயிகள் வேதனை. இதனை அடுத்து அலட்சியத்துடன் வனத்துறையினர் கண்டு கொள்ளவில்லை என விவசாயிகள் குற்றசாட்டு.
தென்காசி மாவட்டம், இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டம் ஆகும். பசுமை போற்றிய போர்வை போல் காணப்படும் இந்த மலையில் வன விலங்குகளான யானை, சிறுத்தை, மான், மிளா, உடும்பு, பன்றி, எறும்புத்திண்ணி, உள்ளிட்ட அரிய வகை வன உயிரினங்களுடன் வாழ்ந்து வருகிறது. அதிகளவில் மூலிகை செடிகள், விலை உயர்ந்த மரங்களும் இருந்து வரக்கூடிய மலை மேற்கு தொடர்ச்சி மலையாகும். இந்த மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் அனைத்தும் பசுமையாக காணப்படக்கூடியது.

இதனை தொடர்ந்து, அதிகளவில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகளவில் விவசாயம் நடைபெற கூடியதும், முப்போகம் நெல் விளையக்கூடிய பூமியாகும். மேலும் சங்கரன் கோவில் அருகே உள்ள சிவகிரி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இரசிங்கப்பேரி கண்மாய் பாசனம் கொண்ட பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களை நள்ளிரவில் புகுந்த காட்டு யானைகள் நெற்பயிற்களை அழித்து நாசம் செய்து விட்டு சென்றதால் விவசாயிகள் மிகுந்த மனை உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதனை அடுத்து யானைகள் நெற்பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகளுக்கு பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக சிவகிரி வனத்துறையினரிடம் பலமுறை கூறியும், பெயரளவில் மட்டும் பார்த்து விட்டு அலட்சியத்துடன் பதில் அளிப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே யானைகள் மலைப்பகுதியை விட்டு விவசாய நிலங்கள் பகுதிக்கு வரமால் தடுக்க வனத்துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். இதனை தொடர்ந்து அலட்சியத்துடன் பதில் கூறும் சிவகிரி வனத்துறையினர் மாவட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை வைத்துள்ளனர்.

இப்படி வன விலங்குகள் விளை நிலங்களை சேதப்படுத்தினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். தமிழக அரசு விவசாயிகளின் நலனில் அக்கறை எடுத்துக்கொண்டு வனத்துறையினர் உதவியோடு வன விலங்குகளை கட்டுப்படுத்த வேண்டும்.அப்போதுதான் விவசாயிகளும், விவசாயமும் பாதுகாக்கப்படும் என்கின்றனர் விவசாயிகள். வனத்துறையும் அரசும் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்.