கணவனை கார் ஏற்றி கொலை செய்த மனைவி : விபத்து போல் நாடகம்..!

2 Min Read

கள்ளகாதலை கண்டித்த கணவன், மனைவியே கணவனை கார் ஏற்றுக் கொன்ற சம்பவம். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட நண்பன். போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்.

- Advertisement -
Ad imageAd image

சென்னை அருகே அயனாபுரம் பகுதியை சேர்ந்தவர் இரும்பு கடை வியாபாரி பிரேம்குமார். இவர் கடந்த 2 ஆம் தேதி அன்று அவரது வீட்டில் இருந்து வெளியே சாலையில் சென்று கொண்டிருந்த போது நள்ளிரவில் விபத்தில் பிரேம்குமார் மரணம் அடைந்தார். புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலிசார் விசாரணையில் அது விபத்தல்ல திட்டமிட்ட கொலை என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் பிரேம்குமாரின் மனைவி சன்பிரியா என்பவர் அதேபகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்பவருடன் பல வருடமாக இருவருக்கும் கள்ளகாதல் இருந்துள்ளது. இந்த காதலுக்கு பிரேம்குமார் இடையூறாக இருந்ததால் மனைவி சன்பிரியா பிரேம்குமாரை கார் ஏற்றி கொலை செய்து விடலாம் என திட்டமிட்டு பிரேம்குமாரை கார் ஏற்றி கள்ளகாதலனும் அவரது நண்பரும் சேர்ந்து பிரேம்குமாரை கொலை செய்தனர். பின்னர் ஹரியின் நண்பர் சரத்குமார் விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அண்ணாநகர் போக்குவரத்து போலீசார்

மேலும் சரத்குமாரும், ஹரியும், சன்பிரியாவும் சேர்ந்து திட்டமிட்டு கொலைக்கான தடையுங்கள் சிக்காமல் இருக்க ஓ.எல்.எக்ஸ் இணையத்தில் பழைய கார் ஒன்றை வாங்கி உள்ளனர். பின்னர் நண்பர்கள் அந்த கார் வாங்கும் போது மாறுவேடத்தில் சென்று வாங்கியுள்ளனர். இந்த கொலைக்கான சம்பவங்கள் யாருக்கும் எந்த தடையும் கிடைத்து விடக்கூடாது என எண்ணி சரத்குமாரும், ஹரியும் சேர்ந்து திட்டம் போட்டனர். சரத்குமாரும், ஹரியும், சன்பிரியாவும் சேர்ந்து திட்டமிட்டு பிரேம்குமாரை கார் ஏற்றி கொன்று விட்டு அதனை விபத்து என்று நம்ப வைத்துள்ளனர். இந்த கொலை செய்ய மொத்தம் 6 லட்சம் ரூபாய் விலை பேசப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ் அப்பில் நண்பர்கள் ஆன ஹரியும், சன்பிரியாவும் பல நாட்களாக கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். பின்னர் சன்பிரியா கணவர் கொடுத்த 68 லட்ச ரூபாய் 200 சவரன் நகைகளோடு தப்பிப்பதாக இருந்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இருவர் கைது

இதனால் இருவரும் கள்ளகாதலில் ஈடுபட்டிருப்பதை அறிந்த பிரேம்குமார் தங்களை ஏதாவது செய்து விடுவார்கள் என அஞ்சு அதற்கு முன்னரே பிரேம்குமாரை கார் ஏற்றி கொன்றுள்ளனர். இதனால் இருவரும் இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சரத்குமார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். கள்ள

murder

காதலுக்கு கணவனை கொலை செய்த மனைவி பற்றிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

Share This Article
Leave a review