இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்,அஸ்வின் அபார பந்துவீச்சு

1 Min Read
இந்திய அணி

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் ,3 ஒரு நாள் மற்றும் 5, 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் டொமினிகாவில் இந்திய நேரப்படி நேற்று இரவு 7:30 மணிக்கு தொடங்கியது.

- Advertisement -
Ad imageAd image

இந்திய அணியில் அறிமுக வீரர்களாக ஜெய்ஸ்வால் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் சேர்க்கப்பட்டனர். இந்திய அணிக்காக ஆடும் 306 வது வீரராக ஜெய்ஸ்வாலும் 307-வது வீரராக இஷான் கிஷன் இணைந்தனர். இதே போல் வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆலிக் புதுமுக வீரராக இடம் பிடித்தார். டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்படி பிராத்வெய்ட்டும்,தேஜ்னரின் சந்தர்பாலும்  வெஸ்ட் இண்டீஸின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினார். நிதானமாக ஆடிய அவர்கள் ஒரு மணி நேரம் தாக்குப் பிடித்தனர். சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் சுழல் தாக்குதலை தொடங்கியதும், இவர்கள் காலியானார்கள்,தேஜ்னரின்(12)ரன்அஸ்வின் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.பிராத்வெய்ட் (20) ரன் ரோகித் சர்மாவிடம் பிடிபட்டார். அடுத்து வந்த ரோமன் ரிபர் (2) ரன் ஷர்துல்தாக்குரின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் இஷான் கிஷனிடம் கேட்ச் ஆனார்.

அப்போது வெஸ்ட் இண்டீஸ் 47 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை பறி கொடுத்து திண்டாடியது. இதற்கு பின்னர் ஜெர்மைன் ப்ளாக்வுட்டும், புதுமுக வீரர் ஆலிக் அதானேசம் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார். ஆனால் இந்த கூட்டணியை சுழல் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா உடைத்தார்.

அவர் வீசிய பந்தை பிளாக்வுட் (14) ரன் தூக்கி அடித்தபோது, அதை பாய்ந்து விழுந்து முகமது சிராஜ் சூப்பராக கேட்ச் பிடித்தார். மதிய உணவு இடைவேளையின் போது வெஸ்டி இண்டீஸ்  அணி முதல் இன்னிங்சில் 28 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 68 ரன்கள் எடுத்திருந்தது. ஆலிக் அதானேஷ்(13) ரன் களத்தில் இருந்தார். இந்திய தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்,ஜடேஜா,ஷர்துல் தாக்குர் தல ஒருவிக்கெட்டும் கைப்பற்றினார்.

Share This Article
Leave a review