நான்கு வருடங்களுக்கு முன்பு பூட்டிய அரசு மதுபான கடையை மீண்டும் பூட்டியதாக கணக்கு காண்பித்த டாஸ்மார்க் நிர்வாகம்

1 Min Read
டாஸ்மாக்

தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் உள்ள 500 டாஸ்மார்க் கடைகள் மூட உத்தரவிட்டது,2021 சட்டமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் ஸ்டாலின், எம்.பி. கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் தமிழகத்தில் பூர்ண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்து இருந்தார்,இரண்டு வருடங்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் உள்ள 500 டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்,

- Advertisement -
Ad imageAd image

இதை அடுத்து கோவை மாவட்டம் முழுவதும் 20 மதுபான கடைகள் மூடப்பட்டது, இதில் பொள்ளாச்சி அருகே உள்ள துறையூர் கிராமத்தில் உள்ள டாஸ்மார்க் கடை எண் 2286, நான்கு வருடங்களுக்கு முன்பு மூடப்பட்டது,டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மூடப்படும் கடைகள் எண்ணிக்கையில் துறையூர் கடையும் உள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும்,தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களின் நலன் கருதி முதல்வர் ஸ்டாலின் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Share This Article
Leave a review