- பொன்னேரி அருகே அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் tamilnadu
- கள் சுத்தம் இல்லை என மாணவிகள் தொடர் குற்றச்சாட்டை முன்வைத்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி நிர்வாகம்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேம்பாக்கம் பகுதியில் ஜெயகோபால் கரடியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இங்கு ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளி பயின்று வருகின்றனர் இந்த நிலையில் மாணவர் மனசு என்ற தலைப்பில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது ஆனால் இதில் பெரும்பாலமான மாணவிகள் 6 முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள கழிப்பறைகளில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் அதனை சுத்தம் செய்து தரக்கூடிய பல மாணவர்கள் கடிதம் எழுதி புகார் பெட்டியில் பலமுறை அளித்ததாகவும் ஆனால் பள்ளி கல்வித்துறையினர் இது குறித்து எந்தவித நடவடிக்கை எடுக்காததால் அலட்சியம் காட்டி வருவதாக தெரிவிக்கின்றனர் மேலும் இதனால் தாங்கள் அதிக அளவில் தண்ணீரை எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிவிக்கின்றனர் அதிக அளவில் தண்ணீர் குடித்தால் அடிக்கடி கழிப்பறை செல்ல வேண்டும் என்பதால் தண்ணீர் குடிக்காமல் தங்கள் உடலை வருத்தி வருவதாகவும் புகார் தெரிவித்தனர் இது குறித்து பள்ளிக் கல்வித் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து பூரான் கம்பளி பூச்சிகள் உள்ளிட்ட வைகளில் இருந்து தங்களை காக்க வேண்டும் எனவும் அவர்கள் மாணவர் மனசு என்ற புகார் பெட்டியில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என அந்த கடிதத்தை சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர் விடியரசு பள்ளிக்கல்வித்துறை நிதி பெறுவதில் மத்திய அரசுடன் சண்டை இட்டு வரும் சூழலில் ஆனால் பள்ளியில் உள்ள குறைபாடுகளை மாணவர்கள் சுட்டிக்காட்டியும் அதன் மீது நடவடிக்கை எடுக்காத இந்த அரசு எவ்வாறு பள்ளி கல்வித்துறையில் சிறந்து விளங்க முடியும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.