மழையின் காரணமாக மலை கிராமத்திற்கு செல்லும் சாலை காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது

1 Min Read
தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது வில்பட்டி ஊராட்சி இப்பகுதியில் உள்ளது கோம்பை மற்றும் பெருங்காடு பகுதி இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மேலும் விவசாய நிலங்களிலும் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image

இப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் வில்பட்டி மற்றும் கொடைக்கானல் நகர் பகுதிக்குத்தான் பள்ளிக்கு வரவேண்டும் இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அவ்வப்போது பலத்த மழையும் சாரல் மழையும் பெய்து வந்தது.

கொடைக்கானல்

இந்நிலையில் நேற்று காலை முதல் நல்ல மழை கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்து வந்தது. இந்நிலையில் விடிய விடிய மழை பெய்ததால் இன்று பகலில் பள்ளங்கியிலிருந்து கோம்பை செல்லும் சாலை காட்டாற்று வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. இதனால் பள்ளிக்கு பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற மாணவ மாணவிகள் மற்றும் கொடைக்கானல் நகர் பகுதிக்கு வேலைக்கு சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்ப முடியவில்லை.

அதேபோல் கோம்பை பெருங்காடுபகுதிக்கு வந்த வில்பட்டி அகம்பட்டி கூலித்தொழிலாளர்கள் மீண்டும் தங்களது பகுதிக்கு செல்ல முடியாமல் உள்ளனர்

காட்றாற்று வெள்ளம்

சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் விரைவாக வந்தனர், அவர்களிடம் பொதுமக்கள் செல்வதற்கு தற்காலிக சாலை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் .

Share This Article
Leave a review