சனாதனத்தை ஒழித்த புரட்சியாளர்….

2 Min Read
ஆன்மிக செம்மல்

மேல்மருவத்தூர் சேர்ந்த பங்காரு அடிகளார் எல்லோராலும் “அம்மா” என்று அன்போடு அழைக்கப்பட்ட பங்காரு அடியார் உடல் நல கோளாறு காரணமாக உயிர் இழந்தார். 1980 களில் தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் பக்தர்களுக்கு மிகப்பெரிய ஆன்மிக புரட்சியை ஏற்படுத்தியவர் பங்கார அடிகளார் பள்ளி ஆசிரியராக செயல்பட்டு வந்த பங்காரு அடிகளார் ”ஓம் சக்தி” என்னும் பெண் தெய்வ வழிபாட்டினை முன்னிலைப்படுத்தி அருள்வாக்கு சொல்வதில் தொடங்கி மன்றங்களை நிறுவி நடத்தி வந்தார்.

- Advertisement -
Ad imageAd image

எல்லோரும் கேரளாவில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு செல்வதும் ஆந்திராவில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு செல்வதும் என்று இருந்த காலகட்டத்தில் ஆந்திரா, கேரளாவை சேர்ந்தவர்களை தமிழகத்திற்கு அழைத்து வந்தவர் பங்காரு அடிகளார்.

பங்காரு அடிகளார்

 

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் பகுதியில் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தினை நிறுவி அந்த ஆலயத்தில் பெண்கள் கருவறை வரை சென்று பூஜை செய்யலாம், பெண்களுக்கு இயற்கையாகவே மாதவிடாய் காலம் தோன்றும் அது போன்ற நாட்களில் பெண்களை எதற்கும் பயன்படாத ஒரு பொருளாக பார்க்கிற ஆணாதிக்க, பெண்ணாதிக்க சூழலில் இருந்து அவர்களுக்கு ஒரு விடுதலையை பெற்று தந்ததில் பங்கார அடிகளாரின் பங்கு முக்கியமானது. ஆமாம் மாதவிடாய் காலத்தில் கோயிலுக்கு வந்து பெண்கள் வழிபாடு செய்யலாம் என்கிற வழிமுறையை அறிமுகம் செய்தவர் பங்கார அடிகளார்.

மாதவிடாய் காலம் என்பது பெண்களுக்கு இயற்கையான ஒன்று அது போன்ற காலங்களில் பெண்களை ஒதுக்கி வைப்பது என்பது மனிதத் தன்மைக்கு எதிரானது என்று எல்லோருக்கும் உணர்த்தியவர் பங்கார அடிகளார். அவர் நிறுவிய ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆண்,பெண்,ஜாதி, மதங்களைக் கடந்து வழிபாடு செய்கிற உரிமையை வழங்கியவர் பங்காரு அடிகளார். ஆண்கள் மட்டுமே மாலை போட்டு கொண்டு விரதம் இருக்கும் அந்த காலங்களில் ஏன் பெண்களும் மாலை போட்டுக்கொண்டு விரதமிருக்கக்கூடாது, ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம் என்பதனை உறுதியாக ஏற்று அந்த கோட்பாடுகளை உடைத்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில் பங்கார அடிகளாரின் பங்கு மிக முக்கியமானது.

முதல்வர் அஞ்சலி

இப்போது பெரிதாக பேசப்படும் சனாதனத்தை 1980 களிலே முறியடித்து தூக்கி எறிந்தவர் பங்காரு அடிகளார். ஆம் அவர் ஒரு சனாதன எதிர்ப்பு புரட்சியாளர் என்பதை நிரூபித்தவர். அவரின் மறைவு ஈடு செய்ய முடியாதது என்பது அல்ல, அவருடைய சிந்தனைகள் அவரை எப்போதும் நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஜோதி நரசிம்மன்
ஆசிரியர்

Share This Article
Leave a review