விழுப்புரம், வி.மருதூர் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் கட்டியுள்ள 290 வீடுகளை இடிக்க நீதி மன்றம் உத்தரவு. வீடுகளை இடிக்க விடாமல் அப்பகுதியில் குடியிருப்பவர்கள் தடுத்ததால் போலீஸ் மற்றும் பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் கீழ் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் துறையினர் குடியிருப்பவர்கள் வீடுகளை இடித்தனர்.
விழுப்புரம் நகரில் வி.மருதூர் பகுதியில் அமைந்துள்ளது மருதூர் ஏரி. இந்த ஏரி நீர் பிடிப்பு பகுதியில் ராஜீவ் காந்தி நகர் மற்றும் மணி நகர் ஆகிய இரண்டு பகுதிகள் அடங்கியுள்ளது. இந்த இரண்டு பகுதிகளிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் 290 குடியிருப்புகள் பட்டா இல்லாமல் புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டதாகவும், வருவாய்த்துறை சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்த வீடுகளை இடிக்க மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டிருந்தார். இதனால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் அந்த குடியிருப்பு பகுதிகளில் புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி இருந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதாக கூறப்பட்டிருந்தது. அதன் பிறகு தான் அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
அதனை தொடர்ந்து அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அப்பகுதியில் வீடுகள் இடிக்கும் பணி இன்று தொடரப்பட்டது. வீடுகளை இடிக்கும் பொழுது அந்த குடியிருப்பு வாசிகள் இயந்திரத்தினை மறித்து அழுது புலம்பினர். இருப்பினும் வீடுகளை இடிக்கும் பணி தொடர்ந்து நடைப்பெற்றது.

இந்த நிலையில், தொடர்ந்து 290 வீடுகளின் இடிக்க உத்தரவிட்டிருந்தாலும் கூட ஒரு சில வீடுகளை மட்டுமே தற்போது வரை இடித்துள்ளனர் வருவாய் துறையினர் மற்றும் ஒரு சில கடைகளையும் இடித்துள்ளனர். வீடுகளை இடிக்கும் போது இடிக்க விடாமல் தடுத்த அப்பகுதியை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.