சவுமியா தோல்விக்கு காரணம் விசிக தான் – பாமக குமுறல்..!

2 Min Read

பாட்டாளி மக்கள் கட்சி தருமபுரியில் தோல்வியுற்றதற்கான காரணங்கள் இணையத்தில் இன்னமும் பேசப்பட்டு வருகின்றன.தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், பாஜக கூட்டணி படுதோல்வியை தழுவியது. இதில், தருமபுரியில் திமுக வேட்பாளர் மணி வெற்றி் பெற்றிருந்தார்.

- Advertisement -
Ad imageAd image

அதே தொகுதியில், பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி போட்டியிட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போது, முன்னிலை வகித்து வந்து, திமுகவுக்கே டஃப் கொடுத்திருந்தார். இதனால் பாமக தொண்டர்கள் பெரும் உற்சாகத்துக்கு ஆளானார்கள்.

மக்களவை தேர்தல்

ஆனாலும், சவுமியா அன்புமணி இறுதி சுற்றுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார். சவுமியா, 21,300 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். திமுக வேட்பாளர் மணி 85,850 ஓட்டுகளைப் பெற்றார். அதாவது, பாமகவுக்கு வெறும் 46,175 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.

விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தர்மபுரி தொகுதி முடிவுகள் குறித்தும் பேசியிருந்தார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தர்மபுரி தேர்தலில் முன்னணி வகித்த பாமக அரூர் தொகுதி ஓட்டு எண்ணிக்கையின் போது,

பாமகவை பின்னுக்குத் தள்ளி திமுகவை வெற்றி பெறச் செய்தது. இதற்கு உதவியது விசிகவின் ஓட்டுக்கள் தான். அதுபோலவே, வரவிருக்கும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்கும் விசிக ஓட்டுகள் துணை நிற்கும் என்று கூறியிருந்தார்.

சவுமியா அன்புமணி

பாமகவை தோற்கடித்ததே விசிகவின் ஓட்டுக்கள் தான் என்று திருமாவளவன் சொன்னதையே, பாமக தரப்பிலும் புகைந்து கொண்டிருக்கிறதாம். இதற்கெல்லாம் காரணம், தேர்தல் வியூகம் இன்னும் சரியாக அமைத்திருக்கலாம் என்கிறார்கள்.

ஆனால், அரூர் தொகுதியில் மட்டும் பாமக ஓட்டு குறைவதற்கு காரணம், விசிக தான். கடுமையான களப்பணிகளை அக்கட்சி மேற்கொண்டிருந்தது. விசிகவுடன் நேரடியான மோதக்கூடாது என்பதற்காக சிதம்பரம் தொகுதியில், கடந்த 2 தேர்தல்களாக பாமக போட்டியிடவில்லை.

விசிக

ஒருவேளை சிதம்பரம் தொகுதியில் பாமக நேருக்கு நேர் மோதியிருந்தால், விசிக திணறியிருக்கும். பாமகவின் பலத்துக்கு ஈடுகொடுப்பதற்காகவே, களப்பணியில் முழுமையான கவனத்தை செலுத்தியிருக்கும் விசிக.

தங்கள் தலைவரை கடும் போட்டியில் இருந்து எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காக, சிதம்பரத்திலேயே முழு கவனத்தையும் விசிகவினர் செலுத்தியிருப்பார்களே தவிர, அரூர் தொகுதியில் களப்பணியில் அதிரடி காட்டியிருக்க மாட்டார்கள்.

திருமாவளவன்

சிதம்பரம் தொகுதியில் விசிகவுக்கு நெருக்கடி இல்லாத காரணத்தினால், அரூர் தொகுதியில் கடுமையாக பணியாற்றி சவுமியாவை வீழ்த்தியிருக்கிறார்கள். தேர்தலுக்கு வியூகம் அமைக்கும்போதே,

இதை யோசித்து செயல்பட்டிருந்தால் சவுமியா இந்நேரம் அமைச்சராகி டெல்லி சென்றிருப்பார் என்று ஆதங்கப்படுகிறார்களாம் பாமகவினர். பாமகவின் தோல்விக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. பாமக மாணவரணி மாநில செயலாளர் முரளி சங்கர் அரூர் தொகுதியை சேர்ந்தவர் என்பதால், மிகவும் செல்வாக்கு மிக்கவர்.

பாமக

குறிப்பாக, தலித் மக்களிடையே, பெருவாரியான ஆதரவை பெற்ற பாமக நிர்வாகியும் ஆவார்.

ஆனால், இவரை விழுப்புரம் தொகுதி வேட்பாளராக அறிவித்தால், அரூரில் முரளி சங்கரால் சரியாக பணியாற்ற முடியாமல் போய்விட்டது. இவர் ஒருவேளை, அரூர் களப்பணியில் இறங்கியிருந்தால், பாமக நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும் என்கிறார்கள் பாமகவினர்.

Share This Article
Leave a review