என்கவுண்டர்க்கு பயந்து தலைமறைவாக இருந்த ரவுடி தானாகவே நீதிமன்றத்தில் சரண்..!

2 Min Read
தலைமறைவாக இருந்த ரவுடி தானாகவே நீதிமன்றத்தில் சரண்

கோவை மாவட்டத்தில் அருகே உள்ள சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் மீது சரவணம்பட்டி பகுதியை உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கொள்ளை, கொலை, கஞ்சா கடத்தல் மற்றும் கொலை முயற்சி உட்பட 15 குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது.

- Advertisement -
Ad imageAd image

இந்த நிலையில் குற்ற வழக்கு தொடர்பாக போலீசார் சண்முகத்தை தேடி வந்த போது, அவர் மறைவான இடத்தில் தலைமறைவாகவே இருந்துள்ளார். இதனை அடுத்து அவரது குடும்ப உறுப்பினர்களை போலிசார் மிரட்டி கைது செய்து விடுவதாகவும், சண்முகத்தை என்கவுன்டர் செய்து விடுவதாகவும் போலீசார் மிரட்டியதாக கூறப்படுகின்றது.

ரவுடி சண்முகம் தனது வழக்கறிஞர்களுடன் போலிசார் குடும்ப உறுப்பினர்களை மிரட்டி வருவதாக கூறி, கோவை மாவட்ட நீதிமன்றத்தில் சரண்

மேலும் போலீசார் சுட்டு விடுவேன் என மிரட்டுவதாகவும், சண்முகம் குடும்ப உறுப்பினர்கள் மீது கஞ்சா கடத்தி விற்பதாக பொய் வழக்கு போட்டு விடுவதாக மிரட்டுவதாகவும், குடும்பத்தினருக்காக நீதிமன்றத்தில் சரண் அடைவதாகவும் 15 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், போலீசார் தொடர்ந்து சண்முகத்தை தேடி வருவதாகவும், எனவே தானாக முன் வந்து சரண் அடைவதாகவும் கூறி போலிசார் சண்முகம் குடும்ப உறுப்பினர்களை மிரட்டி வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று ரவுடி சண்முகம் தனது வழக்கறிஞர்களுடன் போலிசார் குடும்ப உறுப்பினர்களை மிரட்டி வருவதாக கூறி, கோவை மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். கோவை மாவட்ட நீதிமன்றத்தில் சண்முகம் ஆஜராகி சிறையில் இருந்து வெளியில் வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகின்றது என நீதிபதி அவர்களிடம் கூறினார்.

பின்னர் நான் திருந்தி வாழ்ந்து வருகின்றேன். திருந்தி வாழ்ந்து வரும் நிலையில் தன்னை போலீசார் தொடர்ந்து தேடி வருவதாகவும் வழக்கறிஞர்களுடன் கூறி நீதிமன்றத்தில் சரண் அடைவதாகவும் ரவுடி சண்முகம் சரணடைந்தது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

ரவுடி சண்முகம் தனது வழக்கறிஞர்களுடன் போலிசார் குடும்ப உறுப்பினர்களை மிரட்டி வருவதாக கூறி, கோவை மாவட்ட நீதிமன்றத்தில் சரண்

தனது சகோதரர் மீதும் காவல் நிலையங்களில் 5 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறி, சமீபத்தில் அவரை தொடர்ந்து தேடி வந்து பிடித்த போலீசார் கை,கால்களை உடைத்து விட்டதாகவும், ரவுடி சண்முகம் தனக்கு எதுவும் ஆகாமல் இருக்கவே பொதுமக்கள் முன்னிலையில், நீதிமன்றத்தில் தானே முன் வந்து சரண் அடைவதாக, சிறையில் இருந்தே மற்றதை பார்த்து கொள்வதாக ரவுடி சண்முகம் சரணடைந்தது குறித்து தகவல் தெரிவித்தார்.

Share This Article
Leave a review