விழுப்புரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற ரவுடி போலிசார் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், கிழக்கு புதுச்சேரி சாலை இடையே மணிமேகலை தெருவை சேர்ந்தவர் ரவுடியான இருசப்பன். இவரது மகன் அப்பு என்கிற கலையரசன் வயது 28. ரவுடியான இவர் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், அடிதடி, தகராறு, வழக்குகள், நாட்டு வெடிகுண்டு வீசுத,ல் கொலை முயற்சி, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.

கடந்த 2016 ஆம் ஆண்டு, திமுக நகர செயலாளராக இருந்த செல்வராஜ் கொலை வழக்கிலும் அப்பு தொடர்புடையவர். இதனால் இவர் ரவுடி சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட, நகர போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையிலான போலீசார் ரவுடி சரித்திர பதிவேடு குற்றவாளியான அப்புவை தணிக்கை செய்ய அவரது வீட்டுக்கு சென்றார்.

அப்போது, அப்பு விழுப்புரம் மாவட்ட, நகர போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கத்தை அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததோடு திடீரென, அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கத்தை வெட்ட முயன்றார். இதில் சுதாகரித்துக் கொண்ட மகாலிங்கம் அங்கிருந்து நகர்ந்து கொண்டார். பின்னர் சக போலீசார் அப்புவே மடக்கி பிடித்தனர். அவரே போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து. அப்புவை விசாரித்து கைது செய்தனர்.

தொடர்ந்து அவரை விழுப்புரம் மாவட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர் படுத்தி அப்புவை சிறையில் அடைத்தனர்.