திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியபாளையம் அருகே நில அளவீடு செய்ய வந்த தனி வட்டாட்சியரின் வாகனத்தை சென்று கொண்டிருந்த போது தீடிரென்று அவ்ஊர் பொதுமக்கள் சிறை பிடித்து பொதுமக்கள் அனைவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்து பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியபாளையம் அருகே உள்ள பகுதியில் கல்பட்டு, எனம்பாக்கம், மேல்மாளிகைப்பட்டு, செங்காத்தாகுளம், எர்ணாங்குப்பம், வெங்கல் ஆகிய 6 ஊராட்சி பகுதிகளில் சுமார் 1700 ஏக்கர் பரப்பளவில் கொண்ட அறிவுசார் நகரம் அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து கல்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆவாஜிபேட்டை என்னும் கிராமத்தில் முதற்கட்டமாக நில அளவீடு செய்வதற்காக வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து பணிகளை தொடங்கி மேற்கொண்டனர்.
அப்போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து பணிகளை கைவிட்டு வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனையடுத்து தனி வட்டாட்சியர் காரை வழி மறித்து கிராம பொதுமக்கள் அனைவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது அவ்ஊரில் சற்று பரப்பரப்பு ஏற்பட்டது.

மேலும் முக்கிய தொழிலாக விவசாயம் இருந்து வரும் சூழலில் நிலங்களை கையகப்படுத்துவதற்கு கிராம மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தங்களுக்கு எந்த அறிவிப்பும் கொடுக்காமல் நில அளவீடு செய்ய வந்ததற்கு அவ்ஊரில் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக நில அளவீடு எடுப்பதற்கு மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையிடுமாறு தனி வட்டாட்சியர் கூறியதை தொடர்ந்து, அப்பொழுது பொது மக்கள் கலைந்து சென்றனர்.பின்பு தனி வட்டாட்சியர் காரை வழி மறித்து பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.