செய்தி மக்கள் தொடர்பு துறையின் அலுவலர்கள் அரசுக்கும் – மக்களுக்கும் பாலமாக செயல்பட வேண்டும் – அமைச்சர் மு.பெ. சாமிநாதன்..!

2 Min Read

தமிழ்நாட்டில் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர்கள் அரசுக்கும் – மக்களுக்கும் பாலமாக செயல்பட வேண்டும் என்று அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அறிவுரை வழங்கினார்.

- Advertisement -
Ad imageAd image

தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் மண்டல இணை இயக்குநர்களின் பணி ஆய்வு கூட்டம் நேற்று சென்னையில் உள்ள மாநில செய்தி நிலைய கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேசியதாவது;-

அமைச்சர் மு.பெ. சாமிநாதன்

தமிழ்நாட்டில் செய்தித்துறை, அரசினுடைய ஒவ்வொரு செயல்பாட்டையும் மக்களிடம் எடுத்துச் செல்கின்ற மகத்தான பணியை செய்கின்ற துறை சுதந்திர போராட்ட தியாகிகள், தமிழ் மொழிக்காவலர்கள், நாட்டு முன்னேற்றத்திற்கு உழைத்து ஊக்கமளித்த உத்தமர்கள் பலருக்கும் ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள சிலைகள் மற்றும் அரங்கங்களை நாம் பராமரித்து வருகின்றோம். புதிதாக அறிவிக்கப்பட்ட சிலைகளையும் அரங்கங்களையும் உருவாக்கி வருகிறோம்.

இந்த சிலைகள், மணிமண்டபங்களின் முக்கியத்துவத்தை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயலாற்றிட வேண்டும். மண்டல இணை இயக்குநர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுடன் வாட்ஸ் அப் மூலம் ஆய்வு கூட்டம் நடத்தி பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து அறிந்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வப்போது நடைபெற்று வரும் பணிகளின் புகைப்படங்களை பெற்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

அமைச்சர் மு.பெ. சாமிநாதன்

மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள், மாவட்டங்களில் ஏதாவது பிரச்சனை எழும் போது, அதை மாவட்ட ஆட்சி தலைவரிடம் எடுத்துச் சென்று, சுமூக தீர்வு காண வேண்டும். செய்தி மக்கள் தொடர்பு துறையின் அலுவலர்கள் அரசுக்கும் – மக்களுக்கும் பாலமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் சுப்பிரமணியன், இயக்குநர் மோகன், கூடுதல் இயக்குநர் (செய்தி), செல்வராஜ் மற்றும் மண்டல இணை இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a review