தீபாவளியன்று மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

2 Min Read
  • தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இது நவம்பர் மாதம் 3ம் தேதி வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தீபாவளியன்றும் மழை பெய்யும் எனம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -
Ad imageAd image

தமிழகத்தை பொறுத்தவரை இரண்டு பருவமழைகள், மழைப்பொழிவை கொடுக்கும். முதலில் தென்மேற்கு பருவமழை, ஜூலை தொடங்கி செப்டம்பர் இறுதி வரை பொழியும். இந்த ஆண்டு இது, இயல்பை விட அதிகமாகவே பெய்திருந்தது. அதேபோல அக்.1 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இன்றைய தேதிவரை 39% வரை அதிகமாக பெய்திருக்கிறது. இந்நிலையில் தீபாவளிக்கும் இடி,மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 30ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 31ம் தேதி (தீபாவளியன்று) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ.1ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நவ.2 மற்றும் 3ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/anti-corruption-police-against-lottery-president-martin-his-wife-and-others-ordered-the-enforcement-department/

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Share This Article
Leave a review