
தஞ்சை மாதா கோட்டையில் பழமை வாய்ந்த புனித லூர்து சகாய அன்னை ஆலயம் அமைந்துள்ளது இவ்வாலயத்தின் குடும்ப பங்கு பெருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி திருவிழா இரவு நடைபெற்றது மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் லூர்து மாதா சூசையப்பர் மைக்கேல் சம்மனசு ஆகிய சொருபங்கள் 3 தேர்களில் தனித்தனி எழுந்தருளினர்.

முன்னதாக பேண்ட் வாத்தியங்கள் இசைக்க பங்கு தந்தைகள் பங்கு பேரவையினர் ஊர்வலமாக தேர்ந்தெடுத்தும் இடத்திற்கு அழைத்து வரப்பட்டனர் வான வேடிக்கையுடன் புறப்பட்ட தேரினை ஏராளமான பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபட்டனர். திருவிழாவை ஒட்டி ஆலயம் முழுவதும் வண்ண மின் விளக்களால் அலங்கரிக்கப்பட்டு விழா கோலமாக காட்சி அளித்தது.