நடிகை ஜெயபிரதாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

2 Min Read

நடிகை மற்றும் முன்னாள் எம்.பி.யுமான ஜெயபிரதா தனக்கு அளிக்கப்பட்ட ஆறு மாத சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. அவருக்கு சொந்தமான திரையரங்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 18 மாதங்களுக்கும் மேலாக பணியாளர்கள் காப்பிட்டு தொகையை தராமல் இருந்தாக அவர் மீது வழக்கு பதிவு செய்ய பட்டிருந்தது .

- Advertisement -
Ad imageAd image

ஜெயப்பிரதா தனது பள்ளிப்பருவத்தில் அவரது பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆடினார். பார்வையாளர்களில் இருந்த ஒரு திரைப்பட இயக்குனர் அவருக்கு பூமி கோசம் (1974) என்ற தெலுங்கு திரைப்படத்தில் மூன்று நிமிடம் ஆடும் வாய்ப்பினை வழங்கினார் .

தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களில் மிகவும் பிரபலமான நடிகை ஜெயபிரதா, தனது 30 வருட திரை உலக பயணத்தில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஜெயப்பிரதா 1994 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் (டிடிபி) அதன் நிறுவனர் என்.டி.ராமராவின் அழைப்பின் பேரில் இணைந்தார் .அவர் 26 மார்ச் 2019 அன்று தேசிய பொதுச் செயலாளர் பூபேந்தர் யாதவ் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.

ஜெயப்பிரதா மீதான வழக்கில் அவரது சகோதரர் ராஜா பாபு மற்றும் அவரது தொழில் பங்குதாரர் ராம் குமார் ஆகியோரும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக இணைக்கப்பட்டு உள்ளனர் .

ஊழியர்களின் மாநிலக் காப்பீட்டுச் சட்டத்தின் கீழ் , ஊழியர்களுக்கு திரையரங்கு நிர்வாகத்தின் சார்பில் செலுத்தவேண்டிய தொகையை 18 மாதங்களுக்கும் மேலாக செலுத்தாமல் விதி மீறலில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து , இந்த வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது .

இவர்களது திரையரங்கம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த நிலையில் . திரையரங்கு நிர்வாகம் தரப்பில் இஎஸ்ஐ தொகையை பிடித்தம் செய்தாலும், அந்த நிதியை அரசு காப்பீட்டு நிறுவனத்திற்கு மாற்றவில்லை என தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்.

அவர்களது புகாரினை தொடர்ந்து நவம்பர் 1991 முதல் செப்டம்பர் 2002 வரை ரூ.8,17,794 செலுத்தாமல் புறக்கணித்ததாக ஜெயபிரதா மற்றும் அவரது சகோதரர் உட்பட மூன்று குற்றவாளிகள் மீது ESI கார்ப்பரேஷன் புகார் அளித்தது. மேலும் அவர்களுக்கு உரிய தொகையை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இஎஸ்ஐ இன்சூரன்ஸ் இன்ஸ்பெக்டர் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை முதன்மை மாவட்ட நீதிபதி, நடிகை ஜெயபிரதா மற்றும் குற்றம்சாட்ட மேலும் இருவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

தீர்ப்பு நாளன்றும் ஜெயபிரதா நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், அவருக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது அவரது மேல்முறையீட்டை நிராகரித்த நீதிமன்றம், 20 லட்சம் வைப்புத் தொகை செலுத்தி , குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்திற்கு முன் ஆஜர் ஆகாதவரை , ஜாமீன் கோரிய மனுவை ஏற்க முடியாது என்று நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கூறியது.

இவை இரண்டிற்கும் நீதிமன்றமானது 15 நாட்கள் காலஅவகாசம் கொடுத்துள்ளது .

Share This Article
Leave a review