திமுக ஆட்சியில் விவசாயிகளின் வாழ்க்கை போராட்டமாக மாறி உள்ளது..

0
19
  • திமுக ஆட்சியில் விவசாயிகளின் வாழ்க்கை போராட்டமாக மாறி உள்ளது. தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு..

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கருப்பூர் தனியார் திருமண மண்டபத்தில், தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாவட்டத் தலைவர் நிழல்தாசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்..

கபிஸ்தலம் மேட்டு தெரு அரியலூர் ராமநல்லூர் இணைப்பு சாலையை விவசாய நிலங்களை கையகப்படுத்தாமல் மாற்று வழி பாதையில் சாலை அமைக்க அரசாணை பிறப்பிக்க வேண்டும்..

திருமண்டங்குடி சர்க்கரை ஆலை விவசாயிகள் பெயரில் மோசடியாக பல்வேறு தேசிய வங்கிகளில் பெற்ற சுமார் 600-கோடி ரூபாய் சர்க்கரை ஆலை பெற்றுள்ளது இதனை தமிழக முதல்வர், வங்கி கடன் மோசடி செய்த நடவடிக்கை குறித்து மத்திய அரசுக்கு அறிவித்து, ரிசர்வ் வங்கி மூலமாக உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளை காப்பாற்ற தமிழக அரசு முன் வராதது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும்..

உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாக மத்திய நிதித்துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்து விவசாயிகள் பெயரில் மோசடியாக திருஆரூரன் சர்க்கரை ஆலை நிர்வாகம் மோசடி செய்த வங்கி கடன் குறித்து சிபிஐ விசாரணை கூற வேண்டும் எனவும்..

திமுக தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு விவசாயிகள் நிம்மதியாக வாழலாம் என நினைத்தால், திமுக ஆட்சியில் விவசாயிகளின் வாழ்க்கை போராட்ட களமாக மாறி உள்ளதாகவும் தெரிவித்தார்..

பேட்டி..

பி.ஆர்.பாண்டியன், தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here