தஞ்சாவூர் மாவட்டம், அடுத்த ஆடுதுறை பேரூராட்சி சேர்மனும், பாமக வடக்கு மாவட்டச் செயலாளரான ம.க.ஸ்டாலின் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
அதில் பந்தநல்லுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணராஜா, மொபைலில் எண்ணை தொடர்பு கொண்டு ஆபாசமான வார்த்தைகளால் பேசியும், எம்.பி தேர்தலில் நின்றால் பெரிய ஆளாகிட முடியுமா,

உன்னால் என்னை ஒன்னும் செய்ய முடியாது என தொடர்ந்து அருவருக்கத்தக்க ஆபாசமான வார்த்தைகளால் ஒருமையில் பேசியதாகவும், மேலும் உன் மீது போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு உள்ளது. துப்பாக்கியால் சுட்டு காலி செய்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தும்,
நான் நினைத்தால் இன்றே உன்னை சிறையில் அடைப்பேன் என்றும், நான் யாரு தெரியுமா? திருநெல்வேலி காரன்டா.. என மிரட்டியதாக புகார் அளித்துள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்திய எஸ்.பி., ஆஷிஷ் ராவத் பந்தநல்லுார் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ண ராஜாவை, தஞ்சாவூர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

மேலும், தஞ்சை மாவட்ட காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், செயல்படும் பந்தநல்லுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ண ராஜாவை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி,
பாமக மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் தஞ்சாவூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.