நீலகிரி மாவட்டம், குன்னூரில் நள்ளிரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் விமலா என்பவரது வீட்டில் சிறுத்தை புகுந்து, தீயணைப்பு துறையினர் உட்பட 6 பேரை தாக்கிய சம்பவம். அப்பகுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீலகிரி மாவட்டம், குன்னூரில் நள்ளிரவு நேரத்தில் குடியிருப்பு பகுதியில் வீட்டில் சிறுத்தை புகுந்து தீயணைப்பு துறையினர் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்த நிலையில், தற்போது குடியிருப்பு பகுதியில் உள்ள இருக்கும் சிறுத்தையை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை மேற்க்கொள்ளபட்டு உள்ளதாக, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் பேட்டி தெறிவித்தார்.

இந்த நிலையில்சிறுத்தையை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட ஏற்பட்ட படுகாயம் அடைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தற்போது குன்னூர் மற்றும் உதகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் நடைபெற்ற புரூக் லேண்ட்ஸ் குடியிருப்பு பகுதியில் உள்ள விமலா என்பவரது வீட்டில் நுழைந்த சிறுத்தை, வனத்துறையினர் வீட்டிற்குள் உள்ளே சென்று, சிறுத்தையை கண்காணித்து வருவதோடு, அந்த சிறுத்தைக்கு எந்த தொந்தரவும் செய்யாமல் இருக்க, அதனை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டு வருவதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.

மேலும் இந்த குடியிருப்பு அமைந்துள்ள பகுதியில் இடையே அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் வனபகுதியில் இருந்து வரும் வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிகளில் புகுந்து பொதுமக்களை தாக்குவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது குடியிருப்பில் உள்ள அனைத்து கதவுகளையும் திறந்து விடப்பட்டு, வனத்துறையினர் பாதுகாப்பு உபகரணங்களுடன் சிறுத்தையை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை மேற்க்கொண்டு வருகின்றனர்.
மேலும் சிறுத்தை தாக்கி தீயணைப்பு துறையினர் உட்பட படுகாயம் அடைந்த ஏழு பேரும் குன்னூர் மற்றும் உதகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் அதனை கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.