கடந்த 2003 ம் ஆண்டு அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்ட சொத்து அபகரிப்பு வழக்கின் தீர்ப்பு , இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நிரபராதி என்று தீர்ப்பு அளித்துள்ளது .
அவர் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டு உறுதிசெய்யப்பட்டு பொன்முடிக்கு எதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில் அவர் அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்திருந்த நிலையில் செந்தில் பாலாஜியை தொடர்ந்து பொன்முடியும் கைது செய்யப்படுவர் என்ற பதற்றமான சூழ்நிலை நிலவியது .
திமுக தலைமையிலான தமிழக அமைச்சரவையில் உயர்கல்வித்துறை அமைச்சராக தற்போது பதவி வகிப்பவர் பொன்முடி. இவர், கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியிலுள்ள 3,600 சதுர அடி இடத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டதாக புகார் எழுந்தது.

அதாவது 1998ல் சைதாப்பேட்டையில் 3,600 சதுர அடி அரசு நிலத்தை அபகரித்ததாக 2003 ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் படி , அரசுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு முடிவில் வசித்து வந்த கண்ணப்பன் என்கிற கண்ணனை தந்து அதிகாரத்தை பயன்படுத்தி வெளியேற்றிவிட்டு, கண்ணுனுக்கு சொந்தமான இடம் மற்றும் அரசு நிலத்தை பொன்முடி தனது மாமியார் சரஸ்வதிக்கு விற்றது போல் ஆவணங்கள் தயாரித்து ஆள்மாறாட்டம் செய்து சொத்து முழுவதையும் கையகப்படுத்தியதாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியது.
சொத்தை அபகரித்து அந்த நிலத்தில் கடந்த 2003 ம் ஆண்டு ரூ.35 லட்சம் மதிப்பில் வீடு காட்டியதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சிலரும் உதவியதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் பொன்முடி ,அவரது மாமியார் சரஸ்வதி உற்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர் . இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி பொன்முடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்
இந்நிலையில் , சென்னை சிறப்பு நீதிமன்றம், கடந்த ஏப்ரல் 26ம் 2007ம் ஆண்டு பொன்முடியை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது .

இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரத்து செய்து இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வருகின்றது .
இந்த வழக்கு விசாரணையின் பொது பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சார் பதிவாளர் பாபு, கிட்டு என்ற சைதை கிட்டு ஆகியோர் உயிரிழந்த நிலையில் பொன்முடி உற்பட 7 நபர்கள் மீது விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது . இந்த வழக்கில் 90 மேற்பட்ட சாட்சியங்கள் விசாரிக்கபட்டு இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியிடப்படவுள்ளதால் திமுக அமைச்சரவையில் மிகவும் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது .
அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 10 பேரையும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி ஜெயவேல் அறிவித்திருந்தார். இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மீதான வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், போதிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி நில அபகரிப்பு வழக்கில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டார்.
அமைச்சர் உள்ளிட்ட 10 பேரையும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு தொடர்பாக லஞ்சஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக லஞ்சஒழிப்புத்துறை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.