- சென்னை வடபழனியைச் சேர்ந்த காமட்சி என்ற பெண், சில ரவுடிகளால் கடத்தப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் வைத்து கொலை செய்யப்பட்டதாக வழக்கறிஞர் ஒருவர், கடந்த திங்கட்கிழமை, தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, வழக்கறிஞரின் புகார் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இதுபோன்ற சம்பவம் ஏதும் நடைபெறவில்லை என்பது தெரிய வந்ததாகவும், வழக்கை முறையீடு செய்த வழக்கறிஞருக்கும், இந்த தகவலை கூறிய பெண்ணுக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்ததாகவும் அதனாலேயே வழக்கறிஞரிடம் இந்த தகவலை கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது போன்ற கதைகளை சினிமாவில் கூட பார்த்ததில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், அந்த பெண் குறித்து முன்னரே ஏன் தெரிவிக்கவில்லை என வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர்.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/an-old-grandmother-screamed-that-the-houses-built-on-the-government-land-in-vanchiwaka-will-be-removed-and-she-will-not-come/
இதையடுத்து, தாமாக முன்வந்து எடுத்த வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், இது போன்ற விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டுமென வழக்கறிஞருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.