மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் இன்று வெளியீடு..!

2 Min Read
தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 39 தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி பட்டியல் இன்று மாலை வெளியாகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 19-ம் தேதி நடக்கிறது.

- Advertisement -
Ad imageAd image

அப்போது தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கி கடந்த 27ம் தேதி வரை நடந்தது. இதில் 1749 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் வேட்புமனு பரிசீலனை நடந்தது. அதிகபட்சமாக கரூரில் 62 பேரும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினத்தில் 13 பேரும் மனுதாக்கல் செய்திருந்தனர்.

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் இன்று வெளியீடு

அப்போது வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது. அப்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேட்புமனுக்கள் நிறுத்தி வைப்பு, வேட்பாளர்களிடம் விளக்கங்கள் கேட்பு என ஆங்காங்கே பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறின.

குறிப்பாக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரது மனுக்களை ஏற்க கூடாது என பல்வேறு கட்சிகளின் கோரிக்கைகள் வைத்தனர். ஆனால், அவரது மனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

மக்களவை தேர்தல்

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது பெயரிலான 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.

இதேபோல மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதிமாறன், தென்சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியன், வடசென்னையில் கலாநிதி வீராசாமி ஆகியோர் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் இன்று வெளியீடு

இதேபோல பல முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதுடன், 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப் பெற இன்று (சனிக்கிழமை) கடைசி நாளாகும்.

நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனுக்களை திரும்ப பெற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சின்னம் பெறாத கட்சிகள், சுயேச்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும்.

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் இன்று வெளியீடு

வேட்புமனுக்களை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் மாலை நிறைவடைந்ததும், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள், மதிமுக ஆகிய கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படவில்லை. பானை சின்னத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியும், பம்பரம் சின்னத்தை மதிமுகவும் கேட்டு உள்ளன.

இந்திய தேர்தல் ஆணையம்

வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு அந்த கட்சிகளின் வேட்பாளர்கள் எந்த சின்னத்தில் போட்டியிடப் போகிறார்கள் என்பது தெரிய வரும்.

இறுதி பட்டியல் வெளியானதை அடுத்து வேட்பாளர்களின் பிரசாரம் மேலும் தீவிரமடையும். தொடர்ந்து 17-ம் தேதி மாலை வரை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடலாம். இதனால், வரும் நாட்கள் தேர்தல் களம் மேலும் விறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Share This Article
Leave a review