ஆடி மாதம் தொடங்கியவுடன் தமிழகத்தின் அனைத்து அம்மன் கோயில்களிலும் நாள் தோறும் பக்தி விழாக்கள் நடை பெற்று வரும் நிலையில் தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா காளியாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சையை அடுத்த கரந்தையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலயம் உள்ளது இக்கோவிலில் ஆண்டு தோறும் தீமிதி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு தீமிதி உற்சவம் கடந்த ஜூலை 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது,
இதனைத் தொடர்ந்து தினமும் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது, இந்நிலையில் நேற்று முக்கிய நிகழ்ச்சியான காளியாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது, இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்த விழாவை தொடர்ந்து சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பின்னர் கோயிலில் தீ மிதி விழா நடைபெற்றது.தி மிதி விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு தீ குண்டத்தை மிதித்து வழிபட்டனர்.