குவைத் தீ விபத்தில் செஞ்சி இளைஞர் நிலை குறித்து தகவல் தெரியாத நிலையில் குடும்பத்தினர் தவிப்பு. ஒன்றிய அரசும், மாநில அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் தங்கியிருந்த நிலையில் கட்டிடத்தின் சமையல் அறையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் ஏற்பட்ட தீடிர் தீ விபத்தில்,

கட்டிடம் முழுவதும் தீ பரவியதில், 49 பேர் உயிரிழந்த நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதியில் தியாகி இப்ராஹீம் தெருவை சேர்ந்த முகமது ஷரிப் என்பவர்,
கடந்த 14 வருடமாக மெட்டீரியல் ஸ்டீல்சில்வர் கம்பெனியில் போர்மேனாக பணியாற்றி வந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் ஷெரிப் அந்நாட்டின் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில்,

அவரது குடும்பத்தினர்கள் அது முகமது ஷரிபின் புகைப்படம் அல்ல என மறுப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் முகமது ஷெரிப் குறித்து நேற்று முதல் மனைவி மற்றும் உறவினர்கள் தொலைபேசி, வாட்ஸ் அப் மூலமாகவும் தொடர்பு கொண்டு வரும் நிலையில்,

தொலைபேசியை ஷெரிப் எடுக்காத நிலையில் அவரது நிலை குறித்து அறிய முடியாமல் எவ்வித தகவலும் தெரியாமல் குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர்.
எனவே முகமது ஷெரிப் குறித்து தகவலை மத்திய, மாநில அரசுகள் வெளிநாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியவர் குறித்து தகவலினை அக்குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும் என குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.