அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் வீட …

1 Min Read
  • தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு உரந்த ராயன் குடிகாடு அருகே ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்தியலிங்கம் அதிமுகவில் முன்னாள் வீட்டு வசதி துறை அமைச்சராகப் பதவி வகித்தார் மேலும் அடுக்குமாடிக் குடியிருப்பு வழங்கிய விவகாரத்தில் தனியார் நிறுவனத்திடம் இருந்து 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றார்.

 

- Advertisement -
Ad imageAd image

வைத்தியலிங்க மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்த நிலையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகக் கூறி வைத்தியலிங்கத்திற்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனை நடத்த வந்த அதிகாரிகள் மூன்று கார்களில் வந்துள்ளனர் மேலும் 11-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தற்போது வைத்தியலிங்கம் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதற்கட்ட விசாரணை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/weavers-are-protesting-to-sell-silk-cloth-to-the-tune-of-43-crore-rupees-and-to-give-bonus/#google_vignette

வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த வைத்தியலிங்கம் 28 கோடி ரூபாய் பணத்தைத் திட்ட அனுமதி வழங்குவதற்காகத் தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த வைத்தியலிங்கம் வீட்டு வசதித்துறை அமைச்சராகவும் இருந்தார் தற்போதும் ஒரத்தநாடு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

Share This Article
Leave a review