திராவிட மாடல், திராவிட மாடல் என்று மக்களை திண்டாட செய்து திண்டாடும் மாடலாக ஆக்கிவிட்டது. தமிழக அரசு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் குற்றச்சாட்டு.
தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் கடந்த 17, 18-ம் தேதி அதிகனமழை பெய்தது. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், தூத்துக்குடி மக்களை சந்திந்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி, வாகை குளம் விமான நிலையம் வருகை தந்தார். தூத்துக்குடி மாநகரிலுள்ள முருகேசன் நகர் பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து அவர் குறைகளை கேட்டு அறிந்து அவர்களின் மனுக்களையும் பெற்றுக்கொண்டார். பின்னர், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கிய அவர், அங்கு செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;

தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் பால் பவுடர் இல்லாமல் குழந்தைகள் உள்ளனர். உடனடியாக பால்பவுடர் ஏற்பாடு செய்ய வேண்டும். இன்னும் பல உதவிகள் மக்களுக்கு தேவையாக உள்ளது. பொதுவாக நிவாரண உதவிகள் கொடுத்துட்டு போவதில் பயன் தர இயலாது. யார், யாருக்கு என்ன வேண்டும் என்று அதிகாரிகள், அரசியல்வாதிகள் பார்க்க வேண்டும். நிவாரணம் கொடுக்கிறோம் என்று இல்லாமல் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. மருத்துவர் என்ற முறையில் கூறுகிறேன். மழைக்காலங்களில் நோய்கள் வந்துவிடக்கூடாது. ஆகவே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசிடம் 21 ஆயிரம் கோடி, 6,000 கோடி வேண்டும். மேலும், ஒரு நாளைக்கு 6,500 கோடி வேணும் என்று கூறுகின்றீர்கள். அதற்கு இவர்கள் என்ன பணி செய்தார்கள்?

மாற்றான் தான் மனப்பான்மையுடன் தென் மாவட்ட மக்களை தமிழக அரசாங்கம் வஞ்சிக்கிறது. இது மன்னிக்கவே முடியாத ஒரு குற்றம், முற்றிலுமாக தோல்வி அடைந்து இருக்கிறார்கள். ஒரிசா அரசு புயல் வரும் போது 10 லட்சம் பேரை அப்புறப்படுத்தியது. அம்மாநில அரசு, தூத்துக்குடியில் 10 கோடி, 15 கோடி வரை குளங்கள் தூர்வாரப்பட்டது என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பினார். தென்பகுதியில் மழையே இல்லாமல் இருந்த பகுதி, இன்று மழை வந்துள்ளது. அந்த தண்ணீரை பாதுகாக்க என்ன நடவடிக்கை என்ன தொலைநோக்கு திட்டம் இருந்தது. திராவிட மாடல், திராவிட மாடல் என்று மக்களை திண்டாட செய்து திண்டாடும் மாடலாக ஆகிவிட்டது.
மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தென் மாவட்ட மக்கள் நடத்தப்படுகிறார்கள். தமிழக அரசை நேரடியாக நான் குற்றம் சாட்டுகின்றேன். குளம், குட்டைகளை தூர் வாரியது குளத்துக்கு போச்சா யாரு குடலுக்கும் போச்சா. எதுவுமே நடக்கவில்லை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது எனது கருத்து.