நீண்டகாலம் போராடி வரும் மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: தினகரன்

0
17
டிடிவி தினகரன்

நீண்டகாலம் போராடி வரும் மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், பொதுமக்களின் உயிரை காப்பாற்றுவதிலும், ஆரோக்கியத்தை பேணிக்காப்பதிலும் முக்கியப் பங்காற்றும் மருத்துவர்கள் அனைவருக்கும் எனது தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

டி.டி.வி. தினகரன்

கொடிய நோய்த்தொற்று காலத்திலும் தன்னலம் கருதாமல் ஓய்வின்றி உழைத்து மனித உயிர்களை காக்கும் அற்புதமான பணியை மேற்கொண்டு வரும் மருத்துவர்களின் தியாகத்தையும், சேவை மனப்பான்மையையும் போற்றி வணங்கிடும் இந்நாளில், தகுதிக்கேற்ற ஊதியம் கோரி நீண்டகாலம் போராடி வரும் மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here