திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் மாயமான நிலையில், அவரது உடல் சடலமாக கண்டெடுப்பு.
முன்னதாக கடந்த மாதம் 30-ம் தேதி ஜெயக்குமார் தனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுவதாகவும், அவர்கள் வீட்டை சுற்றி வருவதாக தெரிவித்து சிலரது பெயர்களை குறிப்பிட்டு காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தனசிங், கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி அன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில், சொத்து காரணமாக தன்னை சிலர் கொலை செய்ய முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த மாதம் 30-ம் தேதி ஜெயக்குமார் தனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுவதாகவும், அவர்கள் வீட்டை சுற்றி வருவதாக தெரிவித்து சிலரது பெயர்களை குறிப்பிட்டு காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் சில நாள்களாக தன் தந்தையை காணவில்லை என அவரின் மகன் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்து இருந்தார்.

அந்த புகாரில் மே 2 ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து அவர் தந்தை ஜெயகுமார் வெளியே சென்றதாகவும், வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறி, உவரி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
தந்தை மாயமானதாக ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், உவரி அருகில் கரைசுத்து புதூரில் உள்ள தோட்டத்தில், எரிந்த நிலையில் ஜெயக்குமார் தனசிங்கின் உடல் மீட்கப்பட்டது.
ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, ஜெயகுமார் சொத்து பிரச்சினை காரணமாக கொலை செய்யபட்டரா, சொந்த பிரச்சனைகள் காரணமாக கொலை செய்யப்பட்டாரா,

அல்லது ஏதேனும் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
நெல்லை மாவட்ட காங்கிரசில் முக்கிய நிர்வாகியாக இருந்த ஜெயக்குமார் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நெல்லை பகுதியில் பெரும் அதிர்ச்சியும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.