தருமபுரி அருகே சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடிரென பற்றி எரிந்த தீ..!

2 Min Read

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள சேலம், பெங்களூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் கெங்கலாபுரம் மேம்பாலம் என்ற இடத்தில், சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடிரென பற்றி எரிந்ததில் தீ விபத்து நடந்திருக்கிறது.

- Advertisement -
Ad imageAd image

பொள்ளாச்சியில் இருந்த பயணிகளை ஏற்றிய சென்ற தனியார் பேருந்து, பெங்களூரில் இறக்கி விட்டு மீண்டும், தருமபுரி வழியாக பொள்ளாச்சிக்கு பேருந்து சென்று கொண்டிருந்து உள்ளது. அந்த தனியார் பேருந்தில் தென்காசி பகுதியை சேர்ந்த ஓட்டுநர்கள் 1. அப்துல் அமீது 2. அலிஅக்பூர் ஆகிய இருவர் மட்டுமே பேருந்தில் இருந்துள்ளனர்.

சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடிரென பற்றி எரிந்த தீ

தனியார் பேருந்து, சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடிரென கரும்புகையுடன் திடிரென தீ பற்றி எரிவதை அறிந்த ஓட்டுநர்கள் இருவரும் அப்படியே பேருந்தை சாலையில் நிறுத்தி விட்டு பேருந்தில் இருந்து இறங்கி தப்பியுள்ளனர். அந்த தனியார் பேருந்து சிறிது நேரத்திற்கெல்லாம் பேருந்து முழுவதும் தீ மள மளவென பற்றி எரிந்தது. தகவலறிந்து தருமபுரியில் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு தீயணைப்பு வாகனங்ள் தண்ணீர் பீய்ச்சி அடித்து, சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பிறகு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தனியார் பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் நல் வாய்ப்பாக யாருக்கும் காயமோ, உயி்ர் சேதமோ ஏற்படவில்லை, பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்திற்கு போலிசார் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து நடந்த இடத்தில் சாலையின் இருபுறமும் இணைப்பு சாலைகள் இருந்ததால் பெரிதாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

பல லட்ச ரூபாய் மதிப்பிலான பேருந்து தீ பற்றி கருகிய காட்சி

தனியார் பேருந்தில் இருந்த ஏ.சி அல்லது, இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப காரணத்தினால் தீ பற்றியிருக்குமோ என சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர், தீ விபத்து எதனால் நடந்தது என்ற முழுமையான காரணம் தெரியவில்லை. பல லட்ச ரூபாய் மதிப்பிலான பேருந்து தீ பற்றி கருகியது.

Share This Article
Leave a review