குரோம்பேட்டையில் உள்ள ஹோட்டலில் காதலின் கழுத்தை நெறித்து கொன்ற காதலனை போலீசார் கைது செய்தனர்.
கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் பவுசியா வயது 20. இவர் சென்னை குரோம்பேட்டை நியூ காலனி பகுதியில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். பவுசியா தனது சொந்த ஊரை சேர்ந்த ஆஷிக் வயது 20 என்பவரை கடந்த ஐந்தாண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படுவதும் ஆஷிக் அடிக்கடி மாணவியின் தங்கும் விடுதிக்கு வந்து அவருடன் சண்டை போட்டு விட்டு செல்வதும் வழக்கமாக இருந்தது.

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக கல்லூரிக்கு செல்லாத மாணவி பவுசியா நேற்று குரோம்பேட்டில் உள்ள தனியார் ஓட்டலில் காதலன் ஆஷிக் உடன் இருவரும் மறை எடுத்து தங்கி இருந்தனர். ஹோட்டல் அறையில் அவர்களுக்குள் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ஆஷிக் தன்னுடையடி ஷர்ட்டால் மாணவி பவுசியாவின் கழுத்தை நெறித்து கொலை செய்தார். பின்னர் இறந்து கிடந்த காதலியே புகைப்படம் எடுத்து அதனை தனது செல்போனில் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தார். இதனை பார்த்து அதிர்ச்சடைந்த மாணவன் சக தோழிகள் ஓட்டலுக்கு வந்து பார்த்தனர். பின்னர் குரோம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் மாணவி பவுசியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஹோட்டல் அருகில் இருந்த காதலன் ஆஷிக்கை செய்து விசாரணை நடத்தினர். காதலர்கள் இருவரும் 15 வயது இருக்கும் போதே காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதில் பவுசியா கர்ப்பமானார். அவர்களுக்கு குழந்தை பிறந்த பிறகுதான் இருவருக்கும் 15 வயது ஆவது தெரியவந்தது. இதனை அடுத்துஆஷிக்கை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு பிறந்த குழந்தை தற்போது கர்நாடகாவில் உள்ள ஒரு காப்பகத்தில் வளர்ந்து வருகிறது. பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் இருவரும் தங்கள் காதலை தொடர்ந்தனர்.

அப்போது இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளன. அதேபோல் கடந்த மூன்று நாட்களாக குரோம்பேட்டில் உள்ள ஓட்டலில் தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது ஆஷிக்கின் செல்போனை பவுசியா பார்த்தார். அதில் ஆஷிக் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ஆஷிக் காதலியின் கழுத்தை நேரித்துக்கொன்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.