ஆம்ஸ்ட்ராங்கை மிக நெருக்கமாக பின்தொடர்ந்து , உளவுபார்த்து , அவரின் நகர்வுகளை கொலை கும்பலுக்கு தகவல் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு , பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் திருமலை நெஞ்சு வலி காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார் .
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியில் அவர் புதியதாக கட்டுப்பட்டுவந்த கட்டிடத்தை பார்வையிட சென்ற போது மர்ம கும்பலால் வெட்டி படு கொலை செய்யப்பட்டார் .
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள், திருவேங்கடம், திருமலை, பாஜக நிர்வாகி செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், ராமு, கோகுல், சிவசக்தி, தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த ஹரிகரன், அதிமுக நிர்வாகியாக இருந்த வழக்கறிஞர் மலர்கொடி, திமுக நிர்வாகி மகன் சதீஷ், வடசென்னை பாஜக நிர்வாகி அஞ்சலை, அதிமுக கவுன்சிலர் ஹரிஹரன், வழக்கறிஞர் சிவா, பிரதீப், முகிலன், நூர் விஜய், ரவுடி நாகேந்திரன், காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, ராஜேஷ், கோபி, குமரன் என மொத்தம் 27 நபர்களை இதுவரை கைது செய்துள்ளனர் . இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .

இவர்களில் ஆம்ஸ்ட்ராங்கை முதலில் வெட்டிய திருவேங்கடம் என்ற ரௌடியை , போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொன்றனர் .கைது செய்யப்பட்ட முக்கிய நபர்கள் பலரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, சிலர் அவ்வப்போது போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருமலை என்பவருக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது .
துணை தொடர்ந்து கைதி திருமலையை பூந்தமல்லியிலுள்ள மருத்துவமனையில் , முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர் . அங்கு வருக்கு முதலுதவி அளித்த மருத்துவர்கள் திருமலையை உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கும்படி பரிந்துரை செய்தனர் .
அவர்களின் பரிந்துரையின்படி , குற்றவாளி திருமலையை இன்று அதிகாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடனும் அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் .
கொஞ்சம் இதையும் படிங்க: https://thenewscollect.com/product-defect-consumer-court-orders-hp-computer-company-to-pay-compensation-within-two-weeks/
திருமலைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் , அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.