கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த திருக்கோவிலூர் அருகே சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம்,
அவர்கள் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது கிடைத்ததற்கு பெருமைப்படுத்தும் வகையில், கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் என்பதை குறிக்கும் வகையில் “எம்ஜிஆர் போட்டோவாலேயே” கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் உருவத்தை ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.

விஜயகாந்த் அவர்கள் தமிழ் திரைத்துறையில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராகவும், தேமுதிக-வின் நிறுவன தலைவராகவும், தமிழகத்தின் எதிர்க்கட்சி கட்சித் தலைவராகவும் விஜயகாந்த் செயல்பட்டுள்ளார். கடந்த டிசம்பரில் அவர் காலமானார். அவரது மறைவுக்கு பிறகு அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது அறிவிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் நடைபெற்ற விருது விழாவில் விஜயகாந்த் சார்பாக தேமுதிக கட்சியின் பொதுசெயலாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா, விஜயகாந்த் பத்ம பூஷன் விருதை பெற்றுக் கொண்டார்.

இதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா;- கேப்டனுக்காக பத்ம பூஷன் விருது வாங்குவதற்காக டெல்லிக்கு வந்துள்ளோம், கேப்டன் இல்லை என்கிற மிகப்பெரிய மனவலி எங்களுக்கு இருக்கிறது.
இருந்தாலும் மத்திய அரசால் தரக்கூடிய இந்த மிக உயரிய விருதை வாங்குவதில் ஒட்டுமொத்த தேசிய முற்போக்கு திராவிட கழகமும் பெருமை அடைகிறோம் என கூறினார்.

கருப்பு எம்ஜிஆர் கேப்டனுக்கு பத்ம பூஷன் விருது கிடைத்ததற்கு பெருமைப்படுத்தும் வகையில், கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் என்பதை குறிக்கும் வகையில் எம்ஜிஆர் போட்டோவை கொண்டு நீர் வண்ணத்தில் தொட்டு “எம்ஜிஆர் போட்டாவாலேயே” கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் உருவத்தை 5 நிமிடங்களில் ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.
இந்த ஓவியத்தை பார்த்த பொதுமக்கள் கனத்த மனதுடன் கேப்டன் இருந்தால் நல்லா இருக்கும் என்றும், இவர் உண்மையிலேயே கருப்பு எம்ஜிஆர் தான் என்றும், கூறி ஓவிய ஆசிரியர் செல்வத்தை பாராட்டினார்கள்.