வ.உ.சி உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் இடமாற்றம்..!

2 Min Read

கோவை மாவட்டத்தில் அருகே உள்ள வ.உ.சி உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் இடமாற்றம் நகர்வு செய்யப்பட்டன. கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வ.உ.சி உயிரியல் பூங்காவில் போதிய இடவசதி இல்லாததால், மத்திய உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றை வளர்ப்பதற்கு ஆணையம் பூங்காவின் உரிமத்தை ரத்து செய்தது.

- Advertisement -
Ad imageAd image

இன்று கோவையில் வந்த உயிரியல் பூங்கா ஆணைய நிர்வாகிகள் இங்குள்ள விலங்குகளை கணக்கிட்டு ஆய்வு செய்து அவற்றை இடமாற்றம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டனர். கோவையில் மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் கடந்த 2022 ஆம் ஆண்டு கோவையில் செயல்பட்டு வரும் வ.உ.சி உயிரியல் பூங்காவில் வளர்ப்பதற்கு போதிய இடவசதி இல்லாததால், வேறொரு பூங்காவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

வ.உ.சி உயிரியல் பூங்காவில் போதிய இடவசதி இல்லாததால் விலங்குகள் மற்றும் பறவைகள் இடமாற்றம்

இதனால் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உயிரியல் பூங்கா செயல்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது இங்குள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் ஆகியவை இடம் மாற்றம் செய்யப்பட்டன. இங்குள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்தும் வண்டலூர் பூங்கா, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், வேலூர் உயிரியல் பூங்காவிற்கு இடமாற்றம் செய்யப்படுகின்றன. இதற்காக இன்று கோவை வந்த உயிரியல் பூங்கா ஆணைய நிர்வாகிகள் இங்குள்ள விலங்குகளை கணக்கிட்டு ஆய்வு செய்து அவற்றை வேறொரு இடத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டனர்.

இன்றைய தினம் வ.உ.சி உயிரியல் பூங்காவில் பாம்புகள், முதலைகள், குரங்குகள், ரோஸ் பெலிகன் பறவைகள் உள்ளிட்டவை வேறொரு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து இங்குள்ள அனைத்து விலங்குகள் மற்றும் பறவைகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இது குறித்துப் பேசிய வ.உ.சி உயிரியல் பூங்கா டைரக்டர் சரவணன் என்பவர், மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் கடந்த 2022ஆம் ஆண்டு போது போதிய இட வசதி இல்லாததால் இதற்கான ஆணையம் உரிமம் ரத்து செய்யப்பட்டது என குறிப்பிடதக்கது.

வ.உ.சி உயிரியல் பூங்கா டைரக்டர் சரவணன்

இதனால் இங்குள்ள வ.உ.சி உயிரியல் பூங்காவில் இருக்கும் விலங்குகள் மற்றும் பறவைகள் எல்லாம் வண்டலூர், சத்தியமங்கலம், சரணாலயம் போன்ற இட்ங்களில் இடமாற்றுவதாக தெரிவித்தார். இன்று பாம்புகள், குரங்குகள், முதலைகள், ரோஸ் பெலிக்கன் ஆகியவற்றை எல்லாம் எடுத்து, வேறொரு இடத்திற்கு செல்வதாக தெரிவித்தார்.

Share This Article
Leave a review