- சென்னை மாதவரத்தில் அருள்மிகு ஸ்ரீ சொர்ண விநாயகர் ஆலயத்தின் 13 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா பால்குடம் ஏந்தி விமர்சையாக நடைபெற்றது.
சென்னை மாதவரம் பாலகிருஷ்ணா நகரில் எழுந்தருதி உள்ள ஸ்ரீ சொர்ண விநாயகர் ஆலயத்தின் 13 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இவ் விழாவில் தணிகாசலம் நகரில் உள்ள ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் இருந்து பெண்கள் 108 பால்குடங்களுடன் ஊர்வலமாக வந்து ஸ்ரீ சொர்ண விநாயகர் ஆலயத்தில் வந்தடைந்து விநாயகருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து விநாயகரை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியில் ஆலயத்தின் சார்பாக 500க்கும் மேற்பட்டோருக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சொர்ண விநாயகர் ஆலய குழு உறுப்பினர்கள் அப்பகுதிவாள் பொதுமக்கள் பக்த கோடிகள் என பலர் கலந்து கொண்டனர்.
விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் இந்துக்களின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் தமிழகத்தில் விநாயகர் வழிபாடு குறிப்புகள் இல்லை.5ம் நூற்றாண்டில் நரசிம்ம பல்லவன் படையில் தளபதியாக இருந்த சைவ பெரியோர் சிறுதொண்டர் நாயனார் தமிழத்திற்கு கொண்டு வருகிறார். 18ம் நூற்றாண்டிற்கு பிறகே விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு தற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கே நிறுவப்படும் விநாயகர் சிலைகள் முக்கால் அடியில் இருந்து 70 அடி வரை விதவிதமாக செய்யப்படுகின்றன. பின்னர் விநாயகர் சிலையை 3வது நாள் அல்லது 5வது நாள் ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கபடுகிறது. வீடுகள் மற்றும் கடைகளில் சிறிய அளவு மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பூஜை அறையில் வைத்து, கொழுக்கட்டை, சுண்டல், பொறி, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்யப்படுகிறது.