Telangana : மோடி பங்கேற்கும் அரசு விழாவை முதலமைச்சர் புறக்கணிப்பு ?

1 Min Read
தெலுங்கானா மாநில முதல் அமைச்சர் சந்திரசேகர ராவ்

தெலங்கானாவில் பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு விழாவை, அம்மாநில முதல் மந்திரி புறக்கணிப்பனிதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பேசும்பொருளாக மாறியுள்ளது .

தெலங்கானாவில் ரூ.11,360 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார். ஐதராபாத் வந்தடைந்த பிரதமர் மோடியை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

- Advertisement -
Ad imageAd image

இதனை தொடர்ந்து செகந்திராபாத்-திருப்பதி இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வந்தே பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்து ரெயிலில் பயணித்த பிரதமர் மோடி, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த முக்கியமான அரசு விழாவிற்கு தெலுங்கானா மாநில முதல் அமைச்சர் சந்திரசேகர ராவ் பங்குஎடுக்காமல்  புறக்கணித்துள்ளார் என்ற செய்தி நாடு முழுவதும் பெரும் பேசும்பொருளாக மாறியுள்ளது

Share This Article
Leave a review