மின்னஞ்சல் மூலம் இளம் பெண்ணுக்கு அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய வாலிபர் கைது..!

2 Min Read

ஆபாச உணர்வுகளைத் தூண்டும் விதமாகவோ, பாலியல் ஈடுபாட்டை மிகவும் அதிகரிப்பதாகவோ, ஒருவரின் மனதைக் கெடுப்பதாகவோ இருக்கும் எந்த விதமான ஆபாச வீடியோ அல்லது புகைப்படப் பதிவுகளை பலருக்குப் பகிர்வது, இந்த ஆபாசப் பதிவுகளை வைத்து லாபம் சம்பாதிப்பது, விளம்பரப்படுத்துவது, தயாரிப்பது உள்ளிட்டவை தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இந்த சம்பவம் பின்வருமாறு;

- Advertisement -
Ad imageAd image

சென்னை ஐயப்பன் தாங்கலை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அப்புகாரில் தான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், தனக்கு தன்னுடைய அந்தரங்க புகைப்படங்கள் பல மின்னஞ்சல்கள் மூலம் வருவதாகவும் புகார் அளித்திருந்தார். மேலும் தனக்கு முகமது சுல்தான் வயது (29) என்பவர் மீது சந்தேகமாக உள்ளதாக புகாரில் தெரிவித்திருந்தார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார்

விசாரணையில் இளம் பெண் தான் சந்தேகிப்பதாக புகாரில் கூறிய முகமது சுல்தான் பல மின்னஞ்சல்கள் மூலம் இளம் பெண்ணுக்கு அந்தரங்க புகைப்படங்களை அனுப்பியது தெரியவந்தது. இதனை அடுத்து குன்றத்தூரை அடுத்த கோவூரில் தங்கி இருந்த முகமது சுல்தானை கைது செய்த ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் பூந்தமல்லி முதலாம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் ஆபாச புகைப்படம் அனுப்புதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு இந்திய சட்டத்தின்படி இருக்கும் தண்டனைகள். இருபது வயதுக்குக் குறைவான ஒரு நபருக்கு இத்தகைய ஆபாசப்படங்களை, வீடியோக்களை விற்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக வரையறுக்கிறது. இந்தச் சட்டம், ஒருவர் ஆபாசப் படங்களைத் தனிமையில் பார்ப்பதைக் குற்றமாக வரையறுக்கவில்லை.

பூந்தமல்லி முதலாம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்

மாறாக, அந்தப் படங்களை மின்னணு வடிவில் வெளியிட்டால் அல்லது பகிர்ந்தால் அவர் குற்றம் புரிந்தவர் ஆவார். இந்தச் சட்டம், குழந்தைகளின் ஆபாசக் காணொளிகள், படங்கள் ஆகியவற்றை வெளியிடுவது, பகிர்வது மட்டுமின்றிப் பார்ப்பதும் கூட குற்றம் என்கிறது. மேலும், தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம் இழைப்பவர்களுக்கு அபராதமும், ஐந்தாண்டுகள் வரை சிறைத்தண்டனையும் வழங்குகிறது இந்தச் சட்டம். 2019 -ம் ஆண்டு ஜூலை மாதம் திருத்தப்பட்ட `போக்ஸோ’ சட்டத்தின்படி, குழந்தைகளைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துபவர்களுக்கு மரண தண்டனை வரையும், குழந்தைகளின் ஆபாசப் படங்களை வெளியிடுபவர்கள், பரப்புபவர்கள், பார்ப்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான சட்டப்பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

 

Share This Article
Leave a review