18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தஞ்சை பூக்காரத்தெரு அருள் …

Jothi Narasimman
1 Min Read
குடமுழுக்கு

ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டு சுப்ரமணியரை வணங்கி சென்றனர்.
தஞ்சை பூக்காரத்தெருவில் அருள்மிகு சுப்ரமணியர் சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

18ம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட இத்திருக் கோவிலில்  ஸ்ரீ வள்ளி. தேவ சேனை உடனுறை யுடன் ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி எழுந்தருளி உள்ளார். 22 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு இன்று நடைப்பெற்றது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு. கடந்த 30ம் தேதி கணபதி ஹோமம் , மகாலட்சுமி  ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் 19 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு முதல் கால யாகசாலை  பூஜை ஆரம்பம் ஆனது.

இன்று 6ம் கால யாகசாலை பூஜை பூரணா ஹதியுடன் நிறைவுப் பெற்றது. இதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து  புனிதநீர் குடம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பஞ்சவாத்யங்கள் முழங்க., நாதஸ்வர இசையுடன் சிவாச்சாரியார்கள் புனித நீர் குடத்தை எடுத்து வந்தனர். வழிநெடுக பக்தர்கள் மலர்கள் தூவி கோவிலுக்கு அழைத்து சென்றனர். விமானம், ராஜகோபுரம் மற்றும் பரிவாரத் தெய்வங்கள் கோபுர கலசங்களுக்கு சிவரச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி சிறப்பு பூஜைகள் செய்தனர்.

பின்னர் ஒரே நேரத்தில், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.  அப்போது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர். புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தஞ்சை மேயர் சண்.இராமநாதன் கலந்து கொண்டு சுப்ரமணியரை வழிப்பட்டார்.

Share This Article
Leave a review