- நாய்களுக்கான வெறிநாய் தடுப்பூசி முகாமினை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
வெறிநாய் தினத்தை முன்னிட்டு தெருவில் சுற்றித் திரியும் மற்றும் வீட்டில் வளர்க்கக்கூடிய நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் நாய் வளர்ப்போர் தங்களது வளர்ப்பு பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். முகாமினை தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்.
அப்போது தஞ்சை மாவட்டத்தில் 107 விலங்குகள் பராமரிப்பு மையம் மற்றும் 7 கால்நடை மருத்துவமனை உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 9402 தடுப்பூசி கையிருப்பு உள்ளது. மேலும் தேவைக்கு ஏற்ப தடுப்பூசிகள் மத்திய கிழங்கில் இருந்து வரவழைத்து செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சென்னை பிராணிகளான பூனை நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்த்து வருகின்றனர். இந்த செல்லப் பிராணிகள் மேலும் தவிர்க்க முடியாத சில நேரங்களில் நோய் தொற்றுகள் பரவும் அபாயம் உள்ளதால் அவற்றை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு சார்பில் செல்லப்பிராணிகளுக்கு வெறி நோய் ஏற்படாவணம் தடுப்பூசி செலுத்தி வருகிறது.
மேலும் இன்று உலக வெறி நோய் தினத்தை முன்னிட்டு தாங்கள் தங்களின் செல்லப்பிராணிகளை கொண்டு வந்து வெறிநோய் தடுப்பூசி போட்டுக் கொள்ள அன்புடன் அழைக்கின்றோம் என தெரிவித்துள்ளனர்.